tamilnadu

img

அரசியல் பழிவாங்கல் ப.சிதம்பரத்தின் கைதுக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை, ஆக.22- தில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது அரசி யல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின்,“முன்னாள் மத்திய  நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த  தலைவருமான ப. சிதம்பரத்தின் கைது கண்  டிக்கத்தக்கது. இதற்காக சிபிஐ அதிகாரிகள் அவர் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்தது, நாட்டிற்கே அவமானம். இந்த கைது அரசியல்  பழிவாங்கும் நடவடிக்கைதான் என்பது தெரிகிறது” என்றார்.
சட்டத்தின் ஆட்சி தானா?  
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல். திருமாவளவன் எம்பி, வெளியிட்டி ருக்கும் கண்டன அறிக்கையில், முன்னாள் நிதி யமைச்சர் ப.சிதம்பரம் மிகவும் அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிபிஐ , வருமானவரித்துறை ஆகியவற்றை மத்திய பாஜக அரசு தனது ஏவல் ஆட்க ளாகப் பயன்படுத்துவதற்கு இந்த சம்பவங் கள் சாட்சியமாக இருக்கின்றன. இது இந்தி யாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மத்திய அரசின் இந்தப் பழிவாங்கும் போக்கு வன்மை யாகக் கண்டிக்கத் தக்கது” என்று கூறி யுள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ சிபிஐ  அதிகாரிகளுக்கு கடமையை நிறைவேற்றி டும் பொறுப்பு உண்டு என்றாலும், இரவு நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சரின் வீட்டின் சுவர் ஏறிக் குதித்து, ஏதோ ஒரு பயங்  கரவாதி, தீவிரவாதி, சமூக விரோதி என்ற தோற்றத்தை உருவாக்குவதுபோல நடந்து கொண்டதை, நடுநிலையாளர்களும், ஜன நாயகத்தில் நம்பிக்கையுள்ள எந்த மக்களா லும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரி வித்திருக்கிறார். மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவா ஹிருல்லா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.  சிதம்பரத்தை பழிவாங்கும் நோக்கோடு கைது  செய்திருப்பதை வன்மையாகக் கண்டித் துள்ளார்.

;