tamilnadu

img

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும்.... கரும்பு விவசாயிகள் கோரிக்கை மாநாடு தீர்மானம்....

திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத் தணியில்  தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில கோரிக்கை  மாநாடு வெள்ளியன்று (ஜூலை 16) நடைபெற் றது.இதில், மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலிருந்து  300க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்துகொண்டனர். மாவட்டத் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்க பொருளாளர் விஜி கிருஷ்ணன் தொடங்கி வைத்துப் பேசினார்.

ஒன்றிய அரசின் வேளாண்மை சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி  நாட்டின் தலைநகரம் தில்லியில்   விவசாயிகள்  கடும் குளிரிலும், பனியிலும்  கடந்த 7 மாதங்களாக தொடர் போராட் டங்களில்  ஈடுபட்டு  வரும் நிலையில் இதுவரை 470 விவசாயிகள் இறந்துவிட்டனர் என்றார்.  இதன் பின்னரும் ஒன்றிய அரசு இரக்கமின்றி நடந்துகொள்கிறது.  போராடும் விவசாயிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்த  முன் வரமறுக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். விவசாயிகள்  விரோத  வேளாண் சட்ட மசோதவை திரும்ப பெறும் வரை  விவசாயிகள் போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.

தீர்மானங்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில்  செயல்பட்டு வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த மாநில  அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  திமுக தேர்தல் வாக்குறுதிபடி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் உடனடியாக வழங்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் இந்த மாநாட்டில்  நிறைவேற்றப்பட்டன.  தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலபொதுச்செயலாளர் டி.ரவீந்திரன்,  விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துளசி நாராயணன்,  தமிழ்நாடு கரும்பு விவ
சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சம்பத், தமிழ் நாடு விவசாயிகள் சங்க திருத்தணி ஆலை சங்க செயலாளர் பெருமாள் உள்பட பலர் இந்த மாநாட்டில் பேசினர்.

;