tamilnadu

img

மோடி அரசுக்கு எதிராக மக்கள் நிச்சயம் வீதியில் இறங்குவார்கள் கே.எஸ். அழகிரி அறிக்கை

சென்னை,மார்ச் 1 பிரதமர் மோடி ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலை ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள் ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவின் பொருளா தாரம் அதலபாதாளத்தில் சென்றுகொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவதற்கு தீவிரமான முயற்சிகளில் அதிக ஈடுபாடு காட்ட வில்லை. மாறாக மலிவான அரசியல் தந்திரங்களில் மத்திய அரசு ஈடுபட்டு வரு கிறது. பொருளாதார வளர்ச்சி சரிவு குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறும்போது, ‘மத்திய அரசு நாட்டின் பொருளாதா ரத்தை உயர்த்த கவனம் செலுத்த வில்லை. மாறாக, அரசியல் செய்வதிலும் மற்றும் சமூக ரீதியான கொள்கை களிலும் தான் கவனம் செலுத்துகிறது. பொருளா தார சரிவிற்கு இதுதான் முக்கிய காரணம்” என கூறி யுள்ளார். இதைவிட நாட்டு நிலையை எவரும் துல்லிய மாக மதிப்பிட்டுக் கூற முடியாது. இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்வேன் என்று வாக்குறுதி கொடுத்து அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி யில் அமர்ந்த நரேந்திர மோடி அதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வில்லை. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலமாக மக்களை மதரீதியாக பிளவு படுத்துகிற அரசியலை செய்து வருகிறார். 136 கோடி இந்திய மக்களின் குடியுரிமைக்கு ஆபத்து ஏற்படுகிற வகையில் குடியு ரிமை சட்டத்தை திருத்தி யிருக்கிறார். இதனால் நாடு முழுவ தும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டு கடுமையான போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.மக்க ளுக்கு கொடுத்த வாக்குறுதி களின்படி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு மாறாக படுபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டி ருப்பதை எவரும் மறுக்க முடியாது. மக்களிடையே வாங்கும் சக்தி இல்லை, முதலீடுகள் இல்லை, வேலைவாய்ப்பில்லாத திண்டாட்டம், தொழிலாளர் கள் வேலை இழப்பு என அனைத்து நிலைகளிலும் இந்திய பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் எழுகிற கடுமையான விமர்சனங் களை திசை திருப்புவதற் காக மதவாத அரசியலை தீவி ரப்படுத்தி, செயல்படுத்தி வருகிற மோடி அமித்ஷா கூட்டணி ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகிற காலம் மிக தொலைவில் இல்லை. இதன் மூலம் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு உரிய பாடம் கற்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறி யுள்ளார.

;