tamilnadu

ஜூன் 3-ல் பள்ளிகள் திறப்பு

சென்னை,மே 21-தமிழகத்தில் ஜூன் 3 ஆம் தேதிபள்ளிகள் திறக்கப்படும் என்றுபள்ளிக்கல்வித்துறை செவ்வா யன்று அறிவித்தது.தமிழக அரசின் பள்ளிக்கல்விதுறை இயக்குனரகம் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3 அன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலை யில்லா பாடநூல்கள் மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும். இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.