tamilnadu

img

தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு-வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு 

சென்னை : தமிழகத்தில் வரும் செப்.1ம் தேதி , 9வது முதல் 12வது வரை பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் , பள்ளிகள் திறந்தபின் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை கல்வி நிலையங்களையும் திறக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி , நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. 

இந்நிலையில் , தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்துப் பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் , பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் ,சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஆலோசனையில் ஈடுபட்டனர்  . இதன்படி ,செப் 1ம் தேதி , 9வது முதல் 12வது வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் , பள்ளிகள் திறந்த பின்னர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளைத் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது .

பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஐம்பது சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் , ஒவ்வொரு அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுகிறதா என்பதைக் கண்காணிக்கச் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.