tamilnadu

img

மத்திய, மாநில தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு  44 தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும்,   குறைந்தபட்ச ஊதியம் 21 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொழிலாளர், மக்கள் விரோத போக்கை கண்டித்தும்  வரும் ஜனவரி 8ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம்  நடைபெற உள்ளது. அதையொட்டி தொமுச, சிஐடியு உள்ளிட்ட மத்திய, மாநில தொழிற்சங்கங்களின் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சனிக்கிழமை (டிச. 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   இதில் சி.ஐ.டி.யு. மாநில துணைச் செயலாளர் எம்.சந்திரன், கி.நடராஜன் ( தொமுச்), டி.எம்.மூர்த்தி (ஏ.ஐ.டி.யு.சி.), ஆதிகேசவன் (ஐ.என்.டி.யு.சி), ராஜா ஸ்ரீதர் (எச்.எம்.எஸ்.), சாய்குமார் (ஏ.ஐ.யு.டி.யு.சி), எம்.எச். வெங்கடாசலம் (வங்கி ஊழியர் சம்மேளனம்) , பாலகிருஷ்ணன் (சி.ஐ.டி.யு) உள்ளிட்ட பல தொழிற்சங்க தலைவர்கள் பேசினர். இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

;