tamilnadu

img

7 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை பெறும் குற்றவாளிகளை ஆதாரம் இல்லாமல் கைது கூடாது.... மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சென்னை:
சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து சென்ற தந்தை ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்து இறந்த சம்பவம் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் காவல்துறையில் பல்வேறு கட்டுப் பாடுகளை டிஜிபி திரிபாதி விதித்து வருகின்றார்.

குறிப்பாக தற்போது அனைத்து மாவட்ட காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப் பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் குற்றவாளிகளின் சிறை தண்டனை குறைந்தபட்சம் ஏழு வருடங்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட வேண்டும் எனவும்,குற்றத்தன்மையை ஆராய்ந்து கைது செய்ய வேண்டிய அவசியத்தை எழுத்து மூலம் பதிவு செய்து சம்மந்தப்பட்ட போலீசார் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.இதுமட்டுமில்லாமல் கைது செய்யப் பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு  மேஜிஸ்ட்ரேட் குற்றவாளிக்கு வழங்கப்படும் நீதிமன்ற காவல் ஏன் என்றும் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.இந்த விதிமுறைகளை அனைத்து போலீசாரும் பின்பற்ற வேண்டும் எனவும் மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளார்.

;