tamilnadu

img

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம் 

சிறப்பு டிஜிபி யாக இருந்த ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களில் தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது முதல்வரின் பாதுக்கப்பு பணிக்காக சிறப்பு டி.ஜிபி யாக இருந்த ராஜேஷ் தாஸ், பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சென்றுள்ளனர்.  அப்போது டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் , பெண் அதிகாரியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்து புகார் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. 

இந்நிலையில் பெண் அதிகாரி , சென்னையில் புகார் கொடுக்க காரில் சென்றபோது , செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி . கண்ணன், பெண் அதிகாரியை வழிமறித்து  புகார் கொடுக்கவிடாமல் மிரட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து  பெண் அதிகாரி சென்னையில் டிஜிபியிடம் புகாரை கொடுத்ததையடுத்து ,  விசாரணை செய்ய 6 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைக்கப்பட்டுள்ளது.

பெண் அதிகாரி, டி.ஜி.பி யாக இருந்த ராஜெஷ் தா மிது கொடுத்த பாலியல் புகாரை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். மேலும் புகார் கொடுக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி கண்ணனையும் விசாரணை செய்ய சிபிசிஐடி  காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.