tamilnadu

img

மாற்றுத் திறன் மாணவர்களின்  10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

சென்னை:
மாற்றுத்திறன் மாணவர்களின் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கோவிட் 19 நோய் பரவல் காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருந்த மாற்றுத் திறன் மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் இதில் சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ளனர். இதனால் வரும் திங்கள் (21.09.2020) அன்று மாற்றுத் திறன் மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வை எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.

தமிழக அரசின் இந்த செயல் பாரபட்சமாக உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, திங்கள் அன்று நடத்தத் திட்டமிடப் பட்டுள்ள 10ஆம் வகுப்பு மாற்றுத் திறன் மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;