tamilnadu

காலமானார்

சென்னை, ஆக. 11 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 95 வது வட்டக்கிளை உறுப்பினர் ஜி.நீலகண்டன் செவ்வாயன்று (ஆக.11) காலமானார். அவருக்கு வயது 70. அன்னாரது உடல் வில்லி வாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.  முன்னதாக அவரது உடலுக்கு கட்சியின் மத்திய சென்னை  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, எஸ்.கே. முருகேஷ், பகுதிச் செயலாளர் எம்.ஆர்.மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் இரா.மணிமேகலை உள்ளிட்டோர்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.