tamilnadu

img

நெற்பயிர்களை ‘இலைப்பேன்கள்’ சேதப்படுத்துவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் அறிவிப்பு!

நெற்பயிர்களை ‘இலைப்பேன்கள்’ சேதப்படுத்துவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி:  நெற்பயிர்கள் ‘இலைப்பேன்களால்’ பாதிக்கப்பட்டிருந்தால், இளம் நாற்றுக்களில் மஞ்சள் அல்லது வெள்ளை நிற வரிகள் காணப்படும். அதேபோல் நெற்கதிர்களில் மணிகள் பூா்த்தியாகாமல் இருக்கும். மேலும் நெற்பயிா்களின் இளம் இலைகளைச் சுரண்டி, அதன் சாற்றை முழுமையாக உறிஞ்சிவிடும்.

இதனால், நாற்றங்கால் மற்றும் நடவு வயலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படும். கட்டுப்படுத்தும் முறை: இந்நிலையில் பயிர்களை இலைப்பேன்கள் சேதப்படுத்துவதைத் தடுக்க நாற்றங்காலில் ‘அசாடிராக்டின்’ கலவையை ஏக்கருக்கு 600 முதல் 1,000 மி.லி என்ற அளவில் தெளிக்க வேண்டும் அல்லது ‘தியாமெதாக்சம்’ (25 டபிள்யூ ஜி) ஏக்கருக்கு 40 கிராம் தெளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;