tamilnadu

img

ஆசிரியர்களுக்கு பதிவு உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு  

தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான கலந்தாய்வு ஜூலை 11 ஆம் தேதிமுதல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஜூலை 11 ஆம் தேதி நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நடைபெறும். அரசு, நகராட்சி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும்.

அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 13 தேதி நடைபெறும். இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 14,15 ஆம் தேதிகளிலும் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

;