தி.மலையில் தொற்று 702
திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கட்கிழமை 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 615ஆக உயர்ந்துள்ளது.
புதிய கோட்டாட்சியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோட்டாட்சியராக இருந்த குமரேசன் மோகனூர் கூட்டுறவு சக்கரை ஆலை வடிப்பக அலுவலராக மற்றப்பட்டார். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனித்து ஆட்சியராக (சமூக பாதுகாப்பு திட்டம்) பணியாற்றி வந்த குணசேகரன் ஓசூர் புதிய வருவாய் கோட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.
கைது...
ஜோலார்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் காதலன் வீட்டை அடித்து நொறுக்கிய வழக்கில் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5 பெண்கள் உட்பட 10 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் கோணாப்பட்டு அடுத்த ஜெயபுரம் கூட் ரோடு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 6 மாதமாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் - நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் ஜெயபுரம் கூட்ரோடு அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.