சென்னை: 1276 பேருக்கு தொற்று
சென்னையில் 1276 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில்
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 556 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 19 ஆயிரத்து 27 பேர் குண
மடைந்துள்ளனர். 461 பேர் இறந்தனர். 16 ஆயிரத்து 67 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்: 61 பேருக்கு தொற்று
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 61 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 864 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 459 பேர் குணமடைந்துள்ளனர். 10 பேர் உயிரிழந்தனர். 395 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர்: 90 பேருக்கு தொற்று
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்
மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2037ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 1020 பேர் குணமடைந்துள்ளனர். 31 பேர் உயிரிழந்தனர். 986 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு: 162 பேருக்கு தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 162 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3271ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1597 பேர் குண
மடைந்த நிலையில், 33 பேர் இறந்தனர். 1640 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
முழு ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்க சென்னை மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் வரும் 19 முதல் 30ம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, காஞ்சிபுரம் மாவட் டத்திற்குட்பட்ட மாங்காடு, குன்றத்தூர் பேரூராட்சி பகுதிகள் மற்றும் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகள் என 20 இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
சென்னையில் 31 பேர் பலி
சென்னையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 12, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 10, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 2 பேர் என 31 பேர் உயிரிழந்தனர்.
3,000 செவிலியர்கள் வருகை
கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாகூர், நாகர்கோயில், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரம் செவிலியர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2000 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தி.மலையில் தொற்று 814
திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 814ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி எல்லைகள் மூடல்
தமிழகத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரி மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இ-பாஸ் இருந்தால் மருத்துவ சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
காவலர் மரணம்
கொரோனா தொற்றுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி (47) உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு காவல்துறையில் ஏற்பட்டுள்ள முதல் மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.