tamilnadu

ஜனவரி 8-ல் பந்த்

புதுவை தொழிலாளர்கள் பங்கேற்க முடிவு

புதுச்சேரி, நவ.17- தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தும் மத்திய அரசை கண்டித்து ஜனவரி 8ல் நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதுச்சேரி தொழிலாளர்கள் முழுமை யாக பங்கேற்க முடிவு செய்துள்ளனர். சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி உள்ளட்ட மத்திய தொழிற் சங்கங்க ளின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி முதலியார் பேட்டையில் உள்ள ஏஐடி யுசி அலுவலகத்தில் ஞாயிற்றுகிழமை (நவ.17) நடைபெற்றது. இக்கூட்ட த்திற்கு ஐஎன்டியுசி மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஏஐடி யுசி புதுச்சேரி மாநிலத் தலை வர் வி.எஸ்.அபிஷேகம், செயலாளர் சேது செல்வம், துணைச் செயலாளர்  தினேஷ் பொன்னையா, சிஐடியு பிரதேசச் செயலா ளர் சீனுவாசன், பொருளா ளர் பிரபுராஜ், ஏஐசிசிடியு நிர்வாகி புருஷோத்தமன்,  எல்எல்எப் சங்க நிர்வாகி செந்தில், ஏடியு நிர்வாகி ரவி, அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத் தலைவர் பாலமோகனன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மத்திய பாஜக அரசின் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு ஆதரவாக செயல்படு வதை கண்டித்தும்,கட்டாய ஆட்குறைப்பு, லே ஆப், ஆலை மூடல், வேலை யிழப்பு, தொழிலாளர் உரிமைகள் பறிப்பு சட்டங்கள் முதலாளிகளுக்கு சாதகமாக திருத்துவதை கைவிடக் கோரியும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை, நிலம் கையகப்படுத்தி வழங்குதல், பல லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளு படி, ரயில்வே, காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைத்து வருவதை கண்டித்து ஜனவரி 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் அறைகூவல் விடுக்கப்பட்டு ள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை புதுச்சேரியில் வெற்றிகரமாக  நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் வேலைநிறுத்த போராட்ட த்தை ப் ஜனவாரி 3 ஆம் தேதியிலிருந்து 7 ஆம் தேதி வரை வேலைநிறுத்தத்தை விளக்கி புதுச்சேரி முழுவதும் வாகனம் மூலம் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.