tamilnadu

வகுப்பறையில் ஆசிரியர்களை கண்காணிக்க புதிய செயலி

சென்னை, அக். 4- அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகளை ஆண்ட்ராய்ட் செயலி மூலம்  கல்வி அலுவலர்கள் கண்காணிக்  கும் முறையை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்  கல்வித்துறை சார்பில் வெளி யிடப்பட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளின் ஆசிரியர்கள் வகுப்பறையில் எவ்வாறு பாடம்  நடத்துகிறார்கள் என்பதை ஆண்ட்ராய்டு செயலி மூலம்  கண்காணிக்க முடிவு செய்யப்  பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கற்பித்தல், மாண வர்களின் கற்றல் திறனை வெளிப்படுத்துதல், மாண வர்களின் கேள்விகள், சந்தே கங்களுக்கு விடையளித்தல், வகுப்பறை மேலாண்மை, பதி வேடு பராமரித்தல், செயல் வழிக் கற்பித்தல் உள்ளிட்ட பிரிவு களின் கீழ் ஆசிரியர்களின் செயல்பாட்டை செயலி மூலம் கல்வி அலுவலர்கள் மதிப்பீடு செய்து இயக்குநரகத்துக்கு உடனடியாக  தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் பள்ளிகளை ஆய்வு  செய்ய வரும் கல்வி அலுவ லர்கள், பதிவேட்டுக்கு பதிலாக செயலி மூலம் மாணவர்களின் கருத்துகளைக் கேட்டு ஆசிரியர்க ளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்வார்கள் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில் சென்னை, திரு வண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த  முறையானது விரைவில் மாநி லம் முழுவதும் அனைத்து பள்ளி களிலும் அமலுக்கு வர இருப்ப தாக பள்ளிக்கல்வித்துறை தெரி வித்துள்ளது.

;