tamilnadu

img

மகனையும் தந்தையையும் படுகொலை செய்த நீட்

சென்னை, ஆக.14- தலைநகர் சென்னையில் நீட் தேர்வு  தோல்வி காரணமாக கடந்த சனிக்கிழமை  (ஆக.12) தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் திங்களன்று (ஆக.14) அதி காலை தற்கொலை செய்து கொண்டார். சென்னை - குரோம்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் செல்வசேகர். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19) இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். அதனால்  ஏற்பட்ட விரக்தி காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சூழலில் மகன் உயிரிழந்த சோகம் தாங்க முடி யாமல் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சிட்லப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2021-இல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஜெகதீஸ்வரன், மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதற்கான பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சியும் பெற்றுள்ளார். இருந்தும் இரண்டு முறை தேர்வு எழுதி ‘தோல்வியை’ தழுவிய காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார்.  இந்த சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என செல்வசேகர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஜெகதீஸ்வரனுக்கு இறுதிச் சடங்கு நடந்தது. மகனை இழந்த செல்வசேகருடன் நள்ளிரவு வரை  உறவினர்கள் இருந்துள்ளனர். இந்நிலை யில், திங்களன்று (ஆக.14) அதிகாலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அந்த பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

ஆளுநர் ரவியும், ஆர்.எஸ்.எஸ் கொள்கையுமே முழு முதல் காரணம்!

சிபிஎம் கடும் கண்டனம்

நீட் தேர்வு திணிக்கப்பட்டதன் கொடூர  விளைவாக, சென்னை குரோம்பேட்டை யில் வசித்துவரும் ஜெகதீஸ்வரன் என்ற மாணவரும், அவருடைய தந்தையும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது. இதுபோன்ற தற்கொலைகள் பிரச்சனைக்கு தீர்வில்லை, போராட்டங்களை வலுப்படுத்துவதே அவசியம் என்ற போதிலும், நீட் தேர்வை தொடர்ந்து திணித்து வரும் ஒன்றிய பாஜகவும் அதன் கருவியாகச் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியுமே இந்த மரணங்களுக்கு முழுமுதல் காரணம் ஆவர். இத்தனைக்கு பிறகும் தமிழ் நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் போக்கிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறது.

ஆளுநரின் அராஜகம்

ஆளுநர் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழ் நாட்டைச் சேர்ந்த பெற்றோர் ஆளு நரிடம் நேரடியாகவே நீட் திணிப் பின் துயரங்களை முன்வைத்தனர். ஆனால், அவர்களின் நடை முறை அனுபவத்தை முழுமை யாக பேச விடாமல் மைக்கைப் பிடுங்கியது டன் ‘நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவே மாட்டேன்’ என்று அராஜகமான உடல் மொழி யுடன் உதாசீனம் செய்து பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. நீட் தேர்வின் காரணமாக நடக்கும் மாணவர் தற்கொலைகளை மலி னப்படுத்தி, எதிர்க் கட்சிகள் காசுகொடுத்து இப்பிரச்சனையை பெரிதாக்குவதாகவும் பேசினார். அரசமைப்புச் சட்டத்திற்கு நேர் விரோதமான, ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் வெளிப்பாடான இந்தப் பேச்சு பரவலான கண்டனத்திற்குள்ளானது.

மருத்துவக் கட்டமைப்பின் அடித்தளமே சிதைக்கப்படும் ஆபத்து  

நீட் தேர்வை புகுத்திவிட்டால் ஊழல் முறை கேடுகள் தடுக்கப்படும், கல்வியின் தரம் உயரும் என்றுதான் அதனை ஆதரிப்போர் வாதங்களை வைக்கிறார்கள். மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்தியோ உண்மைக்கு நேர் மாறாக இருப்பதைக் காட்டுகிறது. அவரோடு படித்து, அவரை விடவும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் மருத்துவ கனவு நிராசையாகிறது. நீட் பயிற்சி மையங்களும் ஒவ்வொரு ஆண்டும் கட்ட ணக் கொள்ளை மூலம் ஆயிரக் கணக்கான மாணவர்களையும், அவர்களது குடும்பங்களையும் சுரண்டுகிறார்கள். பல ஆண்டு கள் நுழைவுத்தேர்வுக்காக செல விடுவதால் ஏற்படும் அழுத்தமும், மாணவர்களிடையே உருவாகும் பாகுபாடும், கட்டணக் கொள்ளை யின் அதிகரிப்பும் நீட் தேர்வின் நேரடி விளைவுகளாகும். மேலும்,  இதனால் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பின் அடித்தளமே சிதைக் கப்படும் ஆபத்தும் உள்ளது.

  இதுபோன்ற நிலை மைகள் ஏற்படும் என்பதால் தான் தமிழ்நாட்டின் சட்டமன்றம் இந்தப் பிரச்சனையில் நீண்ட விவாதம் நடத்தி, நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் தன்னு டைய அதிகார வரம்பிலேயே வராத ஒரு சட்ட த்தை பல மாதங்கள் கிடப்பில் போட்டு வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கே தாமதப்படுத்தினார். இப்போது வரையிலும் உண்மைக்கு மாறான தகவல் களைச் சொல்லி தமிழ்நாட்டு மக்களை திசை  திருப்பப்  பார்க்கிறார். ஒன்றிய பாஜக ஆட்சியும், ஆர்.எஸ்.எஸ்-ம் அவரை ஆதரித்து வழிநடத்து கின்றன. இப்போக்கினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அனிதா முதல் ஜெகதீஸ்வரன் மற்றும் அவருடைய தந்தையின் தற்கொலை வரை அனைத்து துயரங்களுக்கும் காரணம்  நீட் திணிப்பு மட்டுமே. ஆனால், நீட் கொடுமையை தற்கொலைகளால் முடிவுக்கு கொண்டுவர முடியாது.

சென்னை பல்லாவரம் பகுதி குரோம்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறாததால் தற்கொலை செய்து கொண்டார். இதனால் துக்கம்தாளாமல் மறுநாள்  அவரது தந்தை செல்வ சேகரும் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.  கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன்,  தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

இரக்கமற்ற ஆளுநர்

தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் : முதல்வர்

சென்னை, ஆக.14-  “நீட் விவகாரத்தில் தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசி வரும்  ஆளுநர் ஆர்.என்.ரவியை வன் மையாக கண்டிக்கும் அடையாள மாக ஆகஸ்ட் 15 அன்று, ஆளுநர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தை  புறக்கணிக்க முடிவு செய்துள் ளோம்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கையில், நாட்டின் 77  ஆவது விடுதலை நாளைக் கொண்டாடும் நேரத்தில், சில நாட் களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஜெக தீஸ்வரன் மற்றும் அவரது தந்தை செல்வ சேகர் ஆகிய இருவரும் தங் கள் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி, நம் முன்னோர் தம் இன்னு யிர் ஈந்து நமக்களித்த விடுதலை,  எல்லோருக்குமானதா அல்லது வசதி படைத்த வெகு சில ருக்கானதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. அரியலூர் அனிதாவில் தொட ங்கி இதுவரை விலைமதிப்பில்லா பல மாணவச் செல்வங்களின் உயிர்களை, நீட் தேர்வு முறை காரணமாக தமிழ் நாட்டில் நாம் இழந்திருக்கிறோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மிகக் கேள்விகள், நமது மனச்சாட்சியை உலுக்கி வருகிறது.

இரக்கமற்ற வகையில்...

ஆனால், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர், அவர்தம் பெற்றோரின் கனவுகளை, எதிர்கால நல்வாய்ப்புகளை இழந்து வரும் நிலையை உணர மறுத்து, தமிழ்நாட்டு ஆளுநர் இரக்கமற்ற வகையில் பேசி வருகிறார். ‘நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒரு போதும் அனுமதி அளிக்க மாட்டேன். அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்திட மாட்டேன்’ என்று  பொதுவெளியில் ஆளுநர் ஆர். என்.ரவி பேசியிருப்பது தமிழக  மாணவர்களையும், இளைஞர்க ளையும் அதிர்ச்சி அடைய வைத்துள் ளது. ஏழு ஆண்டுகள் தமிழ்நாட்டில் நடந்து வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றி பேசு கிறார். தமிழ் மக்களைப் பற்றி அக்க றையுள்ளோர், தமிழர் உயிர் துறப்ப தைக் கண்டு கலங்குவர். ஆனால், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள், ‘அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை’ என்பது போல உள்ளது. இந்த நிலை மாறவே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டம் இயற்றி, தமிழ்நாடு அரசு, குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி, திங்களன்று(ஆக.14) கடிதம் அனுப்புகிறேன்.

கல்வித்துறை மீது நடத்தப்படும் சதி

ஆளுநர் அரசியல் ரீதியாக திரா விடம், ஆரியம், திமுக, திருவள்ளு வர், வள்ளலார், சனாதனம் பற்றிப் பேசி வருவதை நாங்கள் மதிக்க வில்லை. அது கபட வேடம் என்பதை அறிந்தே இருக்கிறோம்; ஆரியப் புலம்பலாக ஒதுக்கித் தள்ளுகி றோம். ஆனால், ஏழை எளிய, விளிம்பு நிலை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை அப்படித்தான் சிதைப்பேன் என்று நியமனப் பத வியில் இருக்கும் ஓர் ஆளுநர் கொக்க ரிப்பார் என்றால், இது கல்வித் துறை மீது நடத்தப்படும் சதியாகவே கருது கிறோம். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கிய மானது. நாங்கள் இந்த மாநிலத்திற்கு, இந்த ஆண்டு வந்து, அடுத்த ஆண்டு செல்பவர்கள் அல்ல. ஆட்சியில் இருந் தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் நாட்டு மக்களுக்கு என்றென்றும் உரி மைக் குரலை எழுப்புவோம். பல்கலைக் கழகங்களை சிதைத் தும் - உயர் கல்வித் துறையை குழப்பி யும், தமிழக சட்டமன்றத்தில் மக்கள்  பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவு களுக்கு அனுமதி தரா மல், இதன் உச்சமாக தமிழ்நாடு மாண வர்களை, பெற்றோர்கள், அவர்க ளது எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன் மையாகக் கண்டிக்கிறேன். அதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று, ஆளுநர் மாளிகையில், அவர் ஏற் பாடு செய்திருக்கும் தேநீர் விருந் தினை புறக்கணிக்க முடிவு செய்துள் ளோம். இவ்வாறு முதலமைச்சர் தெரி வித்திருக்கிறார்.
 

 



 

;