சென்னை:
முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு கவுன்சிலிங்கில் எந்த தாமதமும் ஏற்படாது, அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்யும் என்றார்.அண்ணா பல்கலைக் கழக சிறப்பு அந்தஸ்தால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அதற்காக சட்டமியற்றுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என ஜெயக்குமார் வலியுறுத்தினார்.