சென்னை அம்பத்தூரில் ஏசி தீப்பிடித்த விபத்தில் தாய், மகள் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை அம்பத்தூரில் வசித்து வந்த ஹலினா என்பவரது வீட்டில், நேற்று இரவு ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த அறையில் தூங்கிக்கொண்டிருந்த ஹலினா மற்றும் அவரது மகள் நஸ்ரியா ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏசி வயர்கள் தீப்பிடித்து எரிந்ததில், அறை முழுவதும் புகை சூழ்ந்து இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.