tamilnadu

அடிப்படை பென்சன் கோரிக்கையை புறக்கணித்து மோடியின் மோசடித் திட்டம்

நாட்டில் 10 கோடி முதியோர் உள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தில் பாதி அல்லது ரூ.6000 இதில் எது அதிகமோ அதனை அவர்கள் பங்களிப்பு ஏதும் கோராமல் பென்சனாக வழங்குவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18000 வழங்க மார்க்சிஸ்ட் கட்சி உத்தரவாதம் அளிக்கிறது. விவசாய தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.600 வழங்கப்படும் என்றும் அது வாக்குறுதி அளித்துள்ளது.எனவே குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் பாதி ரூ.9 ஆயிரம் குறைந்தபட்ச பென்சனாக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும் 60 வயதை எட்டிய விவசாயத் தொழிலாளர்களுக்கும் வழங்கமார்க்சிஸ்ட் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.எம்ப்ளாயீஸ் பென்சன் திட்டத்தில் உள்ளவர்களுக்கு இப்போது ரூ.1000 குறைந்தபட்ச பென்சனாக தரப்படுகிறது. 60 லட்சம் பென்சன்தாரர்களில் 40லட்சம் பேர் ரூ.1500க்கும் குறைவாக பென்சனையே பெறுகிறார்கள். அவர்களுக்கு 2013ல் நாடாளுமன்ற நிலைக்குழு ரூ.3000 குறைந்தபட்ச பென்சனாக தர பரிந்துரை செய்தது.


இதற்கு ஆகும் ரூ.7ஆயிரம் கோடியை மத்திய அரசு தரவேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது. ஆனால் மோடிஅரசு இதைக்கூட ஏற்கவில்லை. மத்திய தொழிற்சங்கங்கள் 2015, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் நடத்திய வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகளில் ஒன்று அனைவருக்கும் குறைந்தபட்ச பென்சனாக ரூ.6ஆயிரம் வழங்கவேண்டும் என்பதாகும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் எம்ப்ளாயீஸ் பென்சன் திட்டத்தில் குறைந்தபட்ச பென்சனை ரூ.8ஆயிரமாகஉயர்த்த வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால்மோடி அரசு கடந்த ஐந்தாண்டுகளாக பென்சன் கோரிக்கையை புறக்கணித்துவிட்டு மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ரூ.3 ஆயிரம்பங்களிப்பு பென்சன் திட்டத்தை அறிவித்தது. எம்ப்ளாயீஸ் பென்சன் ஸ்கீமில், ரூ.3 ஆயிரத்தை உயர்த்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. அனைவருக்கும் குறைந்தபட்ச பென்சன் ரூ.6ஆயிரம் பற்றியும் எதுவும் இல்லை. இந்த புதிய பங்களிப்பு பென்சனில் 18 வயதில் இருந்து 40 வயது வரை ஒருவர் சேரலாம். மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்தவேண்டும்.அரசு இதற்கு சமமான தொகையை தனதுபங்களிப்பாக செலுத்தும்.யாருக்கு எந்தபென்சனும் இல்லையோ அவர்களுக்குதான் இந்த திட்டம். 60வயது வரை தொடர்ச்சியாக பங்களிப்பு தொகையை செலுத்தவேண்டும்.


இடையில் நிறுத்தி விட்டால் நீங்கள் போட்ட தொகைதான் கிடைக்கும். அரசின் தொகை கிடைக்காது. பென்சனும் கிடைக்காது.60 வயது வரை செலுத்தினால் ரூ.3000 பென்சன் கிடைக்கும்.சம்பந்தப்பட்டநபர் இறந்துவிட்டால் அவரது மனைவிக்கு பாதி பென்சன் அதாவது ரூ.1500 கிடைக்கும். அவருக்கு பிறகு முதலீட்டு பணம் உங்கள்குடும்பத்திற்கு கிடைக்காது. மோடி அரசுக்கு போய்விடும். அடல் பென்சன் யோஜனாஎன்ற திட்டம் ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுவும் இதுபோல பங்களிப்பு திட்டம். அரசு ரூ,1000,ரூ.2000,ரூ,3000, ரூ,4000, ரூ,5000பென்சனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. 3ஆயிரம் பென்சன் திட்டத்தில் சேர்ந்தால் 60 வயதுக்குள் 5.1லட்சம் ரூபாய் சேர்ந்திருக்கும். பென்சனாக மாதம் ரூ.3ஆயிரம் கிடைக்கும். இறந்தால் குடும்ப பென்சனாக அதே ரூ.3ஆயிரம் கிடைக்கும். பாதி அல்ல.இருவரும் இறந்தால் ரூ.5.1லட்சம் குடும்பத்திற்கு திரும்ப கிடைக்கும். அடிப்படை பென்சன் கோரிக்கையை புறக்கணித்து விட்டு இப்படி மோசடியான பென்சன் திட்டத்தை கொண்டு வந்ததுதான்மோடி அரசின் சாதனை. எனவே நியாயமான பென்சன் திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தொழிலாளர்கள் வாக்களிப்பதுதான் சரியானதாக இருக்கும்.

-ஆர்.இளங்கோவன்

;