tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

விஜய்க்கான பாதுகாப்பை அதிகரிக்கும் மோடி அரசு!

சென்னை, அக். 4 - தவெக தலைவர் விஜ ய்க்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்க ஒன்றிய உள்துறை அமைச்ச கத்துக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (CRPF) பரிந்துரைத்துள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன. தவெக தலைவர் விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங் கப்படவில்லை என்று  தவெக தரப்பு கூறியிருந்தது.  அதனடிப்படையில், கரூர் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்ச கம் அறிக்கை கேட்டிருந்தது. விஜய்-க்கு ஏற்கெனவே ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலை யில், தற்போது, ‘ஒய் பிளஸ்’ அல்லது ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக, உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பரிந் துரைத்துள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து உச்சத்தில்  தங்கம் விலை

சென்னை, அக். 4 - ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவு னுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.87,600-ஐ எட்டியது.  வெள்ளிக்கிழமையன்று தங்கம் விலையில், காலை, மாலை என இருமுறை மாற் றங்கள் ஏற்பட்டன. அதன்படி கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.10,900-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.87,200-க்கும் விற்பனையானது.  இந்நிலையில், சனிக் கிழமை (அக்.4) பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 87,600-க்கு  விற்பனையானது. கிராம் ரூ.10,950 ஆக இருந்தது. வெள்ளி விலையும், சனிக் கிழமையன்று கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து ரூ.165 ஆக இருந்தது.