மாணவிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர்
திருவண்ணாமலை மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில்,மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டார்.