tamilnadu

img

ஜிஎஸ்டி மூலம் தமிழ்நாட்டைச் சுரண்டும் மோடி ஆட்சியை வீழ்த்துவோம்!

திருப்பத்தூர், மார்ச் 29- தமிழ்நாட் டிற்கான வரிப் பங்கீட்டைத் தர  மறுக்கும், மோடி தலைமையி லான பாஜக அரசை வீழ்த்து வோம் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு பேசி யுள்ளார். ஜோலார்பேட்டை பகுதி யில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் மேலும் பேசியிருப்பதாவது:

“ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்துள்ளது, இந்த தேர்தல் யார்  வரக்கூடாது என்பதற்கான தேர்தல்.  இது பாசிசத்திற்கும், ஜனநாயகத் திற்கும் இடையே நடைபெறும் தேர்  தல். தமிழ்நாட்டில் சமூக நீதிக்கும் மனுநீதிக்கும் இடையேயான தேர்தல்.

பாஜக எந்த காலத்திலும் தமிழ் நாட்டில் கால் ஊன்ற முடியாது. அதிமுக ஒரு வீணாகப் போன கட்சி. விவசாயிகள் விரும்பாத சட்டம் நாடாளுமன்றத்தில் நிறை வேறுவதற்கு துணைபோனது எடப்  பாடி பழனிசாமி வகையறாக்கள் தான்.

10 ஆண்டுகால ஆட்சி வெறும்  டிரைலர் என்று மோடி கூறுகிறார்.  இந்த டிரைலரிலேயே இதுவரை யில் இல்லாத அளவு விலைவாசி ஏறியுள்ளது. இன்னும் முழுப்படம் பார்த்தால், நாடு தாங்காது. கேஸ் விலை ரூ. 2,700 ஆக உயர்ந்து விடும். நாட்டில் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டியை விதித்துள்ளார். அவர் மூன்றாவது முறை வந்தால், ஜிஎஸ்டி 50 சதவிகிதம் ஆகிவிடும்.

தமிழ்நாட்டில் 100 ரூபாயை வசூல் செய்து 29 ரூபாயாக திருப்பித் தருகிறார். ஆனால் பீகார்,  உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு 200 ரூபாய், 290 ரூபாய் என வழங்கு கிறார். தமிழ்நாட்டின் வரிப் பணத்தைச் சுரண்டி பீகாருக்கும், உத்தரப் பிரதேசத்திற்கும் கொடுக் கிறார். ஆகையால், இந்த முறை நாம் வெற்றி பெற அனைவரும் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும்.”

இவ்வாறு எ.வ. வேலு பேசியுள் ளார்.