திருவொற்றியூர் 4வது வார்டில் மினி பேருந்து சேவை துவக்கம்
திருவொற்றியூர் 4ஆவது வார்டு ஜோதி நகர் வழியாக இயக்கப்படும் மினி பேருந்து சேவையை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேருந்து திருவொற்றியூர் காலடிபேட்டையில் இருந்து சுங்கச்சாவடி, எம்ஜிஆர் சாலை, மாட்டுமந்தை, பாலகிருஷ்ணா நகர், ராஜா சண்முகம் நகர், பொன்னியம்மன்மேடு, சண்முகபுரம், ஜோதிநகர், ராமநாதபுரம், ஜெய்ஹிந்த் நகர், சுனாமி குடியிருப்பு வரை இயக்கப்படுகிறது.