tamilnadu

மெட்ரோ ரயில் இயக்க தயார்: நிர்வாகம்

சென்னை, ஜூலை 20- மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் கூறியிருந்த நிலையில் ஊரடங்கிற்குப் பிறகு, மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கு தயார் என மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மெட்ரோ ரயில், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதித்த பிறகே இயக்க முடியும் என்பதால், அதற்கேற்ப தயாராக இருப்பதற்கான பணிகளை மெட்ரோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பான முறையில் மீண்டும் இயக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், பயணிகள் பயன்படுத்திய பின் மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், ரயில் பெட்டிகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய ஊழியர்களை தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கொரோனா எதிரொலியாக ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதிக்கு பதிலாக மின் விசிறியும், பயண டோக்கன்களுக்குப் பதில் பயண அட்டைகளையும், ரயிலில் இயல்பான வெப்பநிலை, தனி நபர் இடைவெளி என பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதியே அனுமதி கொடுக்கப்பட்டால் கூட உடனடியாக ரயில்களை இயக்க தயார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;