tamilnadu

மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்கும்

சென்னை, பிப். 14 -  சென்னை மாதவரம் - சோழிங் கநல்லூர், மாதவரம் - சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரை யிலான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். 2020-21 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெள்ளி யன்று (பிப்.14) சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்ப தாவது:  25 கோடி ரூபாய் செலவில் தாம்பரத்தை அடுத்துள்ள சிட்லப்பாக்கம் ஏரி மீட்டுடெடுக்கப் படும். பெருநகர சென்னையில் விரிவான வெள்ள பேரிடர் தணிப்பு திட்டத்தினை 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த உலக வங்கி மற்றும் ஆசிய உட் கட்ட மைப்பு முதலீட்டு வங்கியிடம் முன் மொழியப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு 100  கோடி ரூபாய் மானியம் வழங்க 15வது நிதிக்குழு பரிந்துரைத்துள் ளது.

சென்னை மாநகரக் கூட்டாண்மை

சென்னை மாநகரம் தொடர்ந்து நிலைக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி பெறுவதை உறுதி செய்ய, உலக வங்கியின் ஆதரவுடன் ‘சென்னை மாநகரக் கூட்டாண்மை’ என்னும் தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப் படும்.பெருநகரப் போக்குவரத்து, நீர் ஆதாரங்களின் தாங்குத்தன்மை மற்றும் நகர நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை என்ற மூன்று முக்கியத் தூண்களை இத்திட்டம் மையமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின்படி சென்னை நகரம் முழுவதும் படிப்படியாக, 24 மணி நேரமும் குடிநீர் வழங்குதல், கழிவுநீரை சேகரித்து மறுசுழற்சி செய்து பயன்பாட்டிற்குக் கொண்டு வருதல், சென்னைப் பெருநகரக் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தை உலகத் தரம் வாய்ந்த சேவை நிறுவனமாகத் தரம் உயர்த்துதல் மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைப் பதற்கான முதலீடு ஆகியவை இத் திட்டத்தின்முக்கியப் பகுதிகளாக அமையும். இந்த திட்டத்திற்கு உலக வங்கியின் நிதியுதவியாக 100 கோடி அமெரிக்க டாலர்கள் பெறப்பட உள்ளது. 

சுற்றுவட்டச்சாலை

சென்னை சுற்றுவட்டச்சாலை திட்டம் 12 ஆயிரத்து 301 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படு த்தப்பட்டு வருகிறது. அதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் வடிகால்களையும் கூவம், அடையாறு நதிகளின் அனைத்து வடிகால்களையும் 5 ஆயிரத்து 340 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக் கும் பணிகள் நடந்து வருகின்றன. கொசஸ்தலை ஆற்றின் வடிநிலப் பகுதியில், 2 ஆயிரத்து 518 கோடி ரூபாய் செலவில், 765 கிலோமீட்டர் நீளத்திற்கு சென்னை மாநகராட்சி யின் விரிவாக்கப்பட்ட பகுதியில் செயல்படுத்த ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி தயாரித்துள்ளது. இத்திட்டத்திற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். இதற்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1993ஆம் ஆண்டு தொடங் கப்பட்ட சென்னை பொருளியல் பள்ளியே சுயமாக பட்டங்களையும், பட்டயங்களையும் வழங்கும் வகை யில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்ற தரநிலையை தர சட்டம் இயற்றப்படும். சென்னை பொருளியல் பள்ளி தனது வளாகத்திற்கு அருகே ஒரு பொதுநிதிநிலை ஆராய்ச்சி மையம் நிறுவ நிலம் மற்றும் 5 கோடி ரூபாய் மூலதன நிதியத்தை அரசு மானியமாக வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்