tamilnadu

img

பொதுமுடக்கத்தை மேலும் நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை...

சென்னை:
தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் பொதுமுடக்கத்தை நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரைத்துள் ளது. கொரோனா 2-வது அலையால் தமிழகம் உட்படநாடு முழுவதும் தொற்று பாதிப்பு அதிகரித்தது. தற்போது தேசிய அளவில் குறைந்து வருகிறது.  

தமிழ்நாட்டில் 2 வாரங்களுக்கு  முன்பு இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. சென்னை நகரை பொறுத்தவரையில் தினசரி பாதிப்பு 7 ஆயிரம் வரை இருந்தது. இப்போது  2 ஆயிரமாக குறைந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் இதேபோன்று குறைந்து வருகிறது.கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர்,  திருப்பூர், திருச்சிபோன்ற மாவட்டங்களிலும் கணிசமாக குறையதொடங்கியது.இதையடுத்து தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று (மே 4 ) மருத்துவக் குழு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைமேற்கொண்டார்.  இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் ஜூன் 14ஆம்தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனா அதிகமாக உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளும், கொரோனா பாதிப்பு குறைவாகவுள்ள பிற மாவட்டங்களில் நேரக் கட்டுப்பாட்டுடன் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த பரிந்துரையின் அடிப்படையில் பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

;