tamilnadu

img

வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சேர்ப்பு!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தையும் இணைக்கும் சட்ட முன் வடிவு இன்று சட்டப்பேரவையில் நிறைவேறியது. 

காவிர் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலங்களாக அறிவிப்பதற்கான மசோதா கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி அன்று நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் கீழ் வருகின்றன. இதனை தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தையும் இணைக்கும் சட்ட முன் வடிவு இன்று சட்டப்பேரவையில் நிறைவேறியது. 

இதன் மூலம், ஷெல் எரிவாயு, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட ஆய்வுகளுக்கும், விவசாயம் அல்லாத தொழில் சார் திட்டங்களுக்கு இனி அனுமதி அளிக்கப்படாது.
 

;