விழுப்புரம், ஜூலை 8- விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 42 ஆவது வார்டு பாணாம்பட்டு பகுதியில் மாதர் சங்கத்தின் புதிய கிளை துவக்கப் பட்டுள் ளது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ். நீலா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அப் பகுதியில் பாலாஜி நகர், மகா கணபதி நகர், பெருமாள் கோயில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உடனடியாக நட வடிக்கை எடுத்து மினி டேங்க் அமைக்க வேண்டும், தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய கிளைத் தலைவராக ஆர்.ராஜலட்சுமி, செயலாளராக ஏ.சரஸ்வதி, பொருளாளராக ஜி.ராதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.