tamilnadu

img

முதுநிலை மருத்துவம்: 2ஆம் கட்ட கலந்தாய்வு

சென்னை : தமிழ்நாட்டில், அரசு ஒதுக் கீட்டில் காலியாக உள்ள 345 முதுநிலை பட்ட மருத்துவ படிப்பு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சென்னை ஓமந் தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தொடங்கியது. தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆயிரத்து 761 எம்.டி, எம்.எஸ், மற்றும் எம்.டி.எஸ் முதுநிலை மருத்துவ படிப்புகள் இடங்கள் உள்ளன. இதில் தேசிய அளவிலான ஒதுக்கீட்டிற்கு 849 இடங்கள் ஒதுக்கப்பட்டன.மாநில ஒதுக்கீட்டில் 912 இடங்கள் உள்ளன. மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில ஒதுக் கீட்டுக்கு வழங்கப்பட்ட 181 இடங்கள் என மொத்தம் 1093 இடங்களுக்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற்றது. கலந்தாய்வில் இடங்கள் பெற்றும் கல்லூரியில் சேராதோர், இடையில் நின்றோர் என 179 இடங்கள் காலியாக உள்ளது.தேசிய அளவிலான ஒதுக் கீட்டில் நிரம்பாத 166 இடங்களும் மாநில ஒதுக்கீட்டுக்கு வழங்கப் பட்டுள்ளன. எனவே, காலியாக உள்ள 345 இடங்களில் எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

;