tamilnadu

img

தேர்தல் பத்திர மெகா ஊழல்

சென்னை, மார்ச் 6 - தேர்தல் நிதி பத்திரம் விவ காரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சட்டப் போராட்ட த்தையும், மக்கள் போராட்டத்தை யும் நடத்தும் என்று கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

தேர்தல் நிதி பத்திரங்கள் அர சியல் சட்டத்திற்கு விரோதமானது என அறிவித்ததோடு உச்சநீதி மன்றம் அந்த திட்டத்தை ரத்து செய்தது. தீர்ப்பளிக்கப்பட்ட தேதியி லிருந்து (பிப்.15) மூன்று வாரத்திற் குள்(மார்ச் 6) பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் நிதி பத்திர விவரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணை யத்திற்கு அனுப்பிட வேண்டும். தேர்தல் ஆணையம் மார்ச் 13க்குள் அதை வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரங்கள் வாயிலாக 4ல் 3 பங்கு தொகையை பாஜக பெற்றுள்ளது. பாஜகவை காப்பா ற்றும் நோக்குடன், பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு தர கால அவ காசம் கோரி  பாரத  ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. பாஜக ஊழ லுக்கு துணை போகும் இந்த நடவடிக் கையைக் கண்டித்து   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று (மார்ச் 6) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்பிஐ சென்னை வட்டார தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தலைமையேற்ற ஜி.ராம கிருஷ்ணன், “உச்சநீதிமன்றம் பிப்.15 அன்று தீர்ப்பு அளித்தது. எஸ்பிஐ 20 நாட்கள் காத்திருந்து மார்ச் 4 ஆம் தேதி யன்று கால அவகாசம் கோரியுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு கொடுத்த அழுத்தத்தினாலேயே பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ, பாஜகவின் மோசடிக்கு துணை போகிறது. பாஜகவின் ஊழல், தேர்தலுக்கு முன்பாக வெளியாகிவிடக்கூடாது என்பதால்தான் ஜூன் 30 வரை எஸ்பிஐ கால அவகாசம் கோருகிறது.  மோடி - அமித்ஷா அரசின் நிர்பந்தம் இல்லாமல் எஸ்பிஐ தலைமை நிர்வாகம் மட்டும் இம்முடிவிற்கு சென்றி ருக்காது” என்று கூறினார்.

அரசு வங்கிகளில் முதன்முதலாக 1990களிலேயே பாரத ஸ்டேட் வங்கி யின் அனைத்து கிளைகளும் கணினி மயமானது. ஒவ்வொரு கிளையிலும் மாலை ஊழியர்கள் பணி முடி வதற்குள் அன்றைய டெபாசிட் மற்றும்  வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கு வது ஆகிய கணக்கை முடித்துவிட்டு செல்வார்கள். தேர்தல் நிதி பத்திரம் சம்பந்தப்பட்ட விபரங்கள் அனைத்தையும் சில மணி நேரத்தில் அல்லது சில நாட்களுக்குள் முடித்துவிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கைமாறு செய்யும்  எஸ்பிஐ பொதுமேலாளர் 
“ஹிண்டன்பர்க் அறிக்கை வந்த பிறகு அதானி குழுமத்திற்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கிய இன்றைய  எஸ்பிஐ முதன்மைப் பொது மேலாள ருக்கு மோடி அரசு கால நீட்டிப்பு செய்து  இன்றும் அவர் பதவியில் உள்ளார். இதற்குதான் அவர் கைமாறு செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

12.04.2019 அன்று தேர்தல் நிதி பத்திரங்கள் சம்பந்தப்பட்ட விபரங்களை உச்சநீதிமன்றம் எப்பொழுது கேட்டா லும் அவற்றை வழங்கக்கூடிய அடிப்படை யில் எஸ்பிஐ தயாராக வைத்திருக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் அறி வுறுத்தியது” என்றும் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

இந்த போராட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், எம்.ராம கிருஷ்ணன், இரா.சிந்தன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் ஆ.பிரியதர்ஷினி, எம்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.