தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்க! எழும்பூரில் சிஐடியு போராட்டம் - கைது
சென்னை, ஆக. 16 - தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி சனிக்கிழமையன்று (ஆக.16) எழும்பூரில் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ரிப்பன் மாளிகை முன்பு பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்கள் அமைதியாக போராட்டம் நடத்தி வந்தனர். உயர்நீதிமன்ற உத்தரவை காட்டி நள்ளிரவில் தொழிலாளர்களை காவல்துறையினர் அராஜகமாக கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் நிரந்தம் செய்ய வேண்டும், மாநகராட்சி பணி களை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும், போராடும் தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என வலி யுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு, சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சிஐடியு மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எம்.தயாளன் தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில் செயலாளர் சி.திருவேட்டை, செங்கொடி சங்கத்தின் தலைவர் ஜெ.பட்டாபி, பொதுச்செயலாளர் பி.சீனிவாசலு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில பொருளாளர் பாரதி, மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், செயலாளர் ஜா.பார்திபன், ஆட்டோ-டாக்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணிய, அனைத்திந்திய மாதர் சங்க மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.நாகராணி, செய லாளர் வெ.தனலட்சுமி, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், செய லாளர் கு.தமிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.