திருக்கழுக்குன்றம், ஜூலை 22- மகாபலிபுரத்திற்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது. சங்கத்தின் 12ஆவது மாவட்ட மாநாடு திருக்கழுக்குன்றத்தில் தோழர் எ.ராமசாமி நினைவரங்கில்ல் மாவட்டத் தலைவர் வே. லெனின் தலைமையில் நடைபெற்றது. வர வேற்புக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார் மாநாட்டைத் துவக்கிவைத்து சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எம்.தங்கராஜ் பேசி னார். செயலாளர் சி.முகமது உசேன் வேலை அறிக்கையையும், பொருளாளர் எம்.என்.ஸ்ரீராம் வரவு செலவு அறிக்கையையும் சமர்பித்தனர். ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் என்.சாரங்கன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலா ளர் அணுக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசி னார். மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் தி.கலைச்செல்வி பேசி னார். மாவட்ட இணை செயலாளர் கோவிந்தன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணி பணி நீக்க உத்தரவைத் திரும்பப் பெறவேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய மாற்றத்தின் போது வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், மதிப்பூதியம் தொகுப்பூதி யம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு அனை வருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசாணை 100, 101 மற்றும் 56ஐ ரத்து செய்ய வேண்டும், செய்யூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு கட்டடம் கட்ட வேண்டும், மகாபலிபுரத்திற்கு ரயில் பாதை அமைக்க வேண்டும், காஞ்சிபுரத்திலிருந்து மேல்மருவத்தூர் வரை மின்சார ரயில் இயக்க வேண்டும், திருக்கழுக்குன்றத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும், காலியாக உள்ள சத்துணவு ஊழியர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும், செங்கல் பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் செல்ல மின் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் செங்கல்பட்டு நகரத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டின் நிறைவாகத் திருக்கழுக் குன்றம் பேருந்து நிலையம் அருகில் மாவட்டத் தலைவர் வெ.லெனின் தலைமையில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் மாவட்டச் செயலா ளர் சி.முகமது உசேன், ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி முன்னாள் மாநிலச் செயலாளர் மத்தேயு, சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ். கண்ணன், மாநிலச் செயலாளர் தி. கலைச்செல்வி உள்ளிட்ட பலர் பேசினர்.
புதிய நிர்வாகிகள்
புதிய மாவட்டத் தலைவராக வெ. லெனின், செயலாளராக சி.முகமது உசேன், பொருளாளராக எம்.என்.ஸ்ரீராம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.