tamilnadu

சென்னை மற்றும் திருவள்ளூர் முக்கிய செய்திகள்

வாரிசுகளுக்கு வேலை: ஓய்வூதியர் கோரிக்கை

திருவள்ளூர், ஜூன் 24-  எண்ணூர் அசோக்லேலண்ட் ஓய்வு பெற்ற நலச் சங்கத்தின் கூட்டம் மீஞ்சூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு  சங்கத்தின் தலைவர் எஸ்.பச்சையப்பன் தலைமை தாங்கி னார். பி.கதிர்வேல் வரவேற்றார், செயலாளர் ஜி.முத்து, பொருளாளர் மா.மனோகரன், பி.கலைமணி, அமிர்த லிங்கம், வழக்கறிஞர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் நிர்வாகி எஸ்.உமா காந்தன் சிறப்புரையாற்றினார். சிவபெருமான் நன்றி கூறினார். ஓய்வு பெற்ற நலச் சங்கத்தின் நிர்வாகிகளாக பி.கதிர்வேலு, ஜெயபாலன், கலைமணி, வெங்கட்ரமணா, முனிரத்தினம், அப்துல் ரஹ்மான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், பி.எப் பிடித்தம் நிலுவையில் உள்ளதை நிறுவனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன. 

பொறியியல்  கலந்தாய்வு விழிப்புணர்வு கருத்தரங்கு

சென்னை, ஜூன் 24 பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்க ளுக்கான ஆன்லைன் கவுன்சிலிங், அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதில், பங்கேற்க உள்ள மாணவர்கள் தமது விருப்பத்திற்குரிய கல்லூரி மற்றும் பாடப் பிரிவினை தேர்ந்தெடுப்பது குறித்த ‘தொலைநோக்கு 2019’ என்ற இலவசக் கருத்தரங்கானது, வரும் ஜூன் 28 (வெள்ளிக்கிழமை) அன்று, சென்னை - சேத்துப்பட்டில்  உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதனை தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.  உயர் கல்வித் துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் தொடங்கி வைக்கவுள்ள இந்நிகழ்ச்சியில் பெற்றோர்களும், மாணவர்களும் பங்கேற்று பயன்பெறலாம். இந்த ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வையும், செயல்முறைகளையும் விளக்கமாக எடுத்துரைக்கவும், பொறியியல் படிப்பதனால் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

;