tamilnadu

சென்னை மற்றும் திருநெல்வேலி முக்கிய செய்திகள்

ரூ.20 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடி, ஜன.13- தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் பல வகையானகடல் அட்டைகள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படையின ருடன் தாளமுத்து நகர் காவல் துறையினர் சோதனையிட்டனர். அப்போது அந்த கிடங்கில், அரசால் தடைசெய்யப்பட்ட சீனி வெள்ளைநூல் அட்டை 500 கிலோவும், கருப்பு நூல்அட்டை 150 கிலோவும் மற்றும் வெள்ளை நூல் அட்டை 250 கிலோவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக கண்ணன் (43), சைலேந்தர்(26)ரேம்குமார் (15) ஆகியோரை கைது செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். பின்னர் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

போகியின் போது பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

திருநெல்வேலி, ஜன.13- போகி பண்டிகையின் போது பழையபொருட்களை எரிக்க வேண்டாம் என நெல்லை, தென்காசி மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.  நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப் படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக் கும் காரணமாக உள்ளது. எனவே,போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலி

ஆவடி, ஜன.13- அம்பத்தூர், கல்யாணபுரத்தைச் சேர்ந்த வர் பரத், (27) மெக்கானிக். இவர் ஞாயிறன்று நண்பர்களுடன் திருமுல்லைவாயல், பொத்தூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். பரத் உட்பட அவரது நண்பர்கள் அங்கேயே குளித்த னர். அப்போது தண்ணீரில் பரத் அடித்துச்  செல்லப்பட்டார். இது குறித்து நண்பர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரி வித்தனர். இதனைத் தொடர்ந்து செங்குன்றம், ஆவடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், திங்களன்று (ஜன.13) கால்வாயில் உள்ள பெரிய பள்ளத்தில் இருந்த முட்புதரில் பரத்  உடல்  சிக்கியிருந்தது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதேபோன்று காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் விக்னேஷ் பழவேற்காட்டில் தங்கி மீன்பிடித்து வந்தார். இந்நிலையில் ஞாயிறன்று மீன்பிடிக்கச் சென்றபோது படகு கவிழ்ந்து கடலில் மூழ்கினார். இது குறித்து  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மீனவர்களுடன் காவலர்களும் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விக்னேஷ் உடல் பழவேற்காடு முகத்துவாரம் அருகே பழைய அரங்கம் குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியது. 

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைபெற முகாம்

திருவள்ளூர், ஜன.13-  திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை பெற விண்ணப்பிப்பதற்கான முகாம் நடை பெறவுள்ளது  மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். கீழ்கண்டவாறு முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதிகள்:  ஜனவரி 23 ஆம் தேதி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம்,  பூண்டி ஜனவரி 24 ஆம்தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம்,  திருவலாங்காடு ஜன. 28 ஆம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், பள்ளிப்பட்டு ஜன.29 ஆம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், மீஞ்சூர் ஜன.30 ஆம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், ஆர்.கே.பேட்டை ஜன.31 ஆம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், எல்லாபுரம் பிப்ரவரி 4 வட்டார வளர்ச்சி அலுவலகம், புழல் பிப்.5 ஆம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், திருத்தணி பிப். 6 ஆம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம்,   சோழவரம் பிப். 7 ஆம் தேதி  வட்டார வளர்ச்சி அலுவலகம்,  கும்மிடிப்பூண்டி பிப். 11 ஆம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், ஆவடி, பிப். 12 ஆம் தேதி  நகராட்சி அலுவலகம், பூந்தமல்லி பிப்.13 ஆம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடை பெறுகிறது.  இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், மார்பளவு புகைப்படம் -1, மாற்றுத்திறனாளியின் கையொப்பம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். 

மாதாந்திர டிக்கெட்டை  டெபிட் கிரெடிட் கார்டு மூலம் பெறலாம்

சென்னை, ஜன.13- மாநகர போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயணச் சலுகை அட்டையை விற்பனை மையங்களில் ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 2 லட்சத்து 61 ஆயிரம் பயணிகள் பணம் கொடுத்து  அட்டை வாங்கி வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி, மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கின்ற வகையில் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் செயல்பட்டு வரும் 29 விற்பனை மையங்களிலும் ஸ்வைப் மிஷின் வாயிலாக பணம் செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், பயணிகள் தங்களது டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, மாநகர போக்குவரத்து கழக அனைத்து விற்பனை மையங்களிலும், பயணச் சலுகை அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் கோ.கணேசன் தெரிவித்துள்ளார். 

உள்ளாட்சித் தேர்தல்:  முறைகேடாக வாக்குப்பதிவு என புகார்

திருவள்ளூர், ஜன.13-  ஊரக உள்ளாட்சித் தேர்த லின் போது, மேல்முதலம் பேடு ஊராட்சியில் இறந்த வர்கள் மற்றும் வெளியூரில் வசிப்பவர்களின் வாக்குகள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் வேட்பாளர் மணிகலா என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள் ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள மேல்முதலம்பேடு ஊராட்சியில் டிசம்பர் 30 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த ஊராட்சியில் உள்ள 6 வார்டுகளில்  3 பேர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் மொத்தம் 1100 வாக்குகள் பதிவாகியது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் மேல்முதலம்பேடு ஊராட்சியில்  உள்ள மேல் காலனியை சேர்ந்த ஜோதி ஏழுமலை என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றார். இவர் இறந்த வர்கள் மற்றும் இங்கு வசிக்காத நபர்களின் வாக்கு களையும் தங்களுக்கு சாதகமாக, பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகளின் உதவியுடன் முறைகேடாக  பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதர வுடன் போட்டியிட்ட வேட்பா ளர் மணிகலா மிகவும் குறைந்த வாக்குகள் வித்தி யாசத்தில் தோல்வியடைந் தார்.  எனவே ஜோதி ஏழுமலை வெற்றியை ரத்து செய்து, மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனக் கோரி வேட்பாளர் மணிகலா  மாவட்ட ஆட்சியர் மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.

;