tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

புறநகர் ரயில்களில் ரூ.70க்கு நாள் முழுவதும் பயணம் செய்யலாம்
சென்னை, டிச.22 புறநகர் மின்சார ரயிலில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்யும் வகையில் பயணிகளுக்கு 70 ரூபாய்க்கு பாஸ் வழங்கப்படுகிறது. தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் சுற்றுலா பயணிகள், பொது மக்களை கவரும் வகையில் ஒரு நாள், 3 நாள், 5 நாட்களுக்கான ‘பாஸ்’ வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இந்த ‘பாஸ்’கள் மூலம் பயணிகள் எளிதில் பயணம் செய்யலாம். ஒரு நாள் முழுவதும் பயணம் செய்யும் வகையில் 2-ம்வகுப்பு ரயில் பாஸ் ரூ.70-க்கு கிடைக்கும் முதல் வகுப்பு ‘பாஸ்’ ரூ.295-க்கு வழங்கப்படுகிறது. இந்த ‘பாஸ்’  வாங்கியவர்கள் சென்னையில் உள்ள அனைத்து மின்சார ரயில்களிலும் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்யலாம். இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் புறநகர் மின்சார ரயில்களில் ‘பாஸ்’வசதி அறிமுகம் செய்துள்ளோம். ரயில் நிலையங்களில் ஒரு நாள், 3நாள், 5 நாட்கள் என 3 வகையான பாஸ்கள் வினியோகம் செய்யப்படும். இந்த பாஸ் மூலம் புறநகர் மின்சார ரயில்களில் விரும்பிய இடங்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.இதன் மூலம் ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க பயணிகள் காத்திருக்கும் நேரம் குறையும் ரெயில்வே நிலையங்களில் காணப்படும் நீண்ட கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஷேர் சாட்டில் சிறுவன் சுஜித் அதிகமாக பகிரப்பட்ட தகவல்
சென்னை,டிச.22 தமிழகத்தில் ஷேர் சாட் பயனாளிகள் திரைப்படம் குறித்த தகவல்களை அதிகமாக அந்த வலைதளத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். அடுத்தபடியாக காதல் குறித்த ஷேர் சாட் பகிரப்படு கிறது. இதுகுறித்த யூஜிசி அறிக்கையை ஷேர் சாட் வெளி யிட்டுள்ளது. அதில் 5கோடியே 60 பயனாளர்கள் பல்வேறு தகவல்களை பகிர்கிறார்கள். மொத்தம் 14 கோடியே 20 மணிநேரம் வீடியோக்கள் இதில் பார்க்கப்படுகிறது.இந்தியாவில் ஷேர் சாட் மாநில மொழிகளில் இயங்கும் மிகப்பெரிய சமூக வளைதளமாக உள்ளது.இதில் சினிமா 36விழுக்காடு இடத்தையும் காதல் 16விழுக்காடு இடத்தை யும் பிடித்துள்ளன. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் சிறுவன் பற்றிய தகவல் அதிகமாக பகிரப்பட்டு முதலிடத்தில் இருந்தது. தேர்தல் முடிவுகள், தீபாவளி வாழ்த்து, அயோத்தி தீர்ப்பு உள்ளிட்டவை முதல் 5 இடங்களில் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன என்று ஷேர் சாட் டிஜிட்டல் உள்ளடக்க நிர்வாகி கதிரேசன் தெரிவித்துள்ளார்.