tamilnadu

img

சென்னை மழை, வெள்ளப் பாதிப்பு

சென்னை, டிச. 5   மிக்ஜம் புயல் மற்றும் அதன் தொட ர்ச்சியாக பெய்து வரும் கனமழை பாதி ப்பு குறித்தும் தமிழ் நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும்  கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினி டம்  செவ்வாயன்று கேட்டறிந்தார்.

தமிழக பாதிப்பு குறித்து கேட்டறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தங்கள் ஆதரவை மிகுந்த மதிப்புடையதாகக் கருதுகிறேன். உங்கள் உண்மையான அக்கறை எங்கள் இதயங்களை அரவணைக்கிறது. ஒன்றாக இணைந்து இந்தச் சவாலை சமாளிப்போம். தொடர்பு கொண்டு விசாரித்தமைக்கு நன்றி” என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.