tamilnadu

img

பெண்களின் வாழ்க்கை முறை மாற்றம் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது

சென்னை,மார்ச் 8- பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மன அழுத்தம், உடல் நலமின்மை, தூக்கமின்மை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஆகியவை நாள்பட்ட நோய்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், மனச் சோர்வு, இதய நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் கூட பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. “கோ இந்தியா ஃபிட் ரிப்போர்ட் 2020’’ படி ஆண்களை விட அதிகமான பெண்கள் ஆரோக்கியமற்றவர்களாக உள்ளனர். அந்த அறிக்கையின்படி 68விழுக்காடு பெண்கள் வாழ்க்கை முறை நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 53 விழுக்காட்டினர்   வேலையை தவிர்த்து வேலை அழுத்தம் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் சாப்பிட வேண்டும் என்பதற்காக   சுகாதாரமற்ற மற்றும் துரித உணவை உட்கொள்கிறார்கள். இதனால்  20 வயதில் எதுவும் ஏற்படாது. ஆனால் அவர்கள் 30வயதை எட்டும்போது முக்கிய பிரச்சனைகளாக மாறும் என்று எச்சரிக்கிறார் மெடால் டயக்னஸ்டிக் மருத்துவர் அகிலா. பெண்களைப் பாதிக்கும் பொதுவான நோய்களில் ஒன்றான பி.சி.ஓக்கள் மாதவிடாய் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். 25-45 வயதிற்குட்பட்ட நகர்ப்புற இந்திய உழைக்கும் பெண்களில் 80விழுக்காட்டினர்  மன அழுத்தம், உட்கார்ந்த இடத்திலேயே வேலை,  வாழ்க்கை முறை அல்லது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம். கவலை, தூக்கிமின்மை ஆகியவை பல நாள்பட்ட நோய்கள் வரக் காரணமாகிறது என்றும் அவர் கூறினார். இவை குழந்தைபேற்றினை பாதிக்கும்.  மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த நோயறிதல் சேவை வழங்குநர்களில் ஒருவரான மெடால் பெண்கள் மத்தியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

;