tamilnadu

img

மக்களை சந்திப்போம், ரயில்வேயை பாதுகாப்போம்,

சென்னை  தர்ணா  போராட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேச்சு

சென்னை, செப். 27- மக்களை சந்திப்போம், ரயில்வேயை பாது காப்போம், மோடி ஆட்சியை வீட்டுக்கனுப்பு வோம் என்று சென்னையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் டி.கே.ரங்கராஜன்தெரிவித்தார். ரயில்வேயை தனியார்மயமாக்கக் கூடாது,  சங்க அங்கீகாரத்திற்கான ரகசியத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சிண ரயில்வே எம்ளாயிஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் செவ்வா யன்று (செப். 27) தர்ணா போராட்டம் நடை பெற்றது. செயல்தலைவர் து.ஜானகிராமன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பேபி ஷகிலா வரவேற்றார். சங்கத்தின் கவுரவத் தலைவர் டி.கே.ரங்க ராஜன் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசு கையில், ரயில்வேயில் உள்ள அனைத்துப் பிரிவுகளையும், நிலங்களையும் ஒன்றிய அரசு குத்தகைக்கு விடுகிறது. குத்தகைக்கு விடுவது என்பதே விற்பனை செய்யப்படுவதுதான். குத்த கைக்கு வழங்கியவர்களிடம் இருந்து திரும்பிப் பெறுவது என்பது கடினமானது. ரயில்வேக்கு சொந்தமாக 12 ஆயிரத்து 66 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்களை தனியாரிடம் வழங்கப் போகிறார்கள். ரயில்வே அரசிடம் இருக்கும் ஆனால் ரயில்கள், ரயில் நிலை யங்கள், கூட்ஸ் வண்டிகளும் தனியாரிடம் இருக்கும். கட்டணத்தை நிர்ணயிப்பதும், ஓட்டு நர்களை, டிக்கெட் பரிசோதகர்களை தேர்வு செய்வதையெல்லாம் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும். 

நஷ்டத்திற்கு யார் காரணம்?

ரயில்வே மருத்துவமனைகளை இ.எஸ்.ஐ. யுடன் இணைப்பது. பின்னர் அதை தனியாரி டம் ஒப்படைப்பது எனும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. ரயில்வே பட்ஜெட்டை யும், பொது பட்ஜெட்டையும் ஒன்றாக்கி விட்டது மோடி அரசு. ரயில்வேயின் பிரச்சனை என்பது மிக மோசமாக ஆழமாக சென்று கொண்டிருக் கிறது. கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு பொருட்கள் வர வேண்டும் என்றால் கப்பலில் ஒன்றரை நாட்களில் வந்து விடும். விமானத்தில் 3 மணி நேரத்தில் வந்து விடும். ரயில்வேயை நவீனப்படுத்தாததால் காலதாமதம் ஏற்படு கிறது. இதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு யார்  காரணம்? ஊழியர்களா? இல்லையே. ரயில்வே யை நவீனப்படுத்தாத நிர்வாகம்தானே பொறுப்பு. அடுத்து புதிதாக வேலைக்கு வருபவர்கள் நிரந்தரமாக பணியில் இருப்பார் கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனென்றால் அனைத்துத் துறைகளிலும் தொகுப்பூதிய முறை அமல்படுத்தப்படுகிறது. 

ரயில்வேயை மட்டுமல்ல  ஒன்றிய அரசையும் எதிர்த்துப் போராட வேண்டும்

ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது  ஜாக்டோ - ஜியோ சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடனே ஜெய லலிதா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர் களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றம் வரை சென்று அனைவருக்கும் மீண்டும் பணி பெற்றுக் கொடுத்தது சிஐடியு தான். தொழிலாளர்களை பாதுகாப்பதில் முன்ன ணியில் இருப்பது சிஐடியு மட்டும்தான். டிஆர்இ யுவிற்கு மிகப்பெரிய போராட்ட வரலாறு உண்டு. வெள்ளைக்காரர்கள் ரயில்வேயில் 3 ஊதிய முறையை அமல்படுத்தினார்கள். இதை எதிர்த்துப் போராடி முதல் ஊதியக் குழுவை அமைத்தது டிஆர்இயுதான். ரயில்வே போர்டை  எதிர்த்துப் போராடினால் மட்டும் போதாது, ஒன்றிய அரசையும் எதிர்த்துப் போராட வேண்டும். இதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஏனென்றால் அரசியல் சாசனத்தை, தொழிலா ளர் நலச் சட்டங்களை மாற்ற முயற்சிக்கிறார்கள்.

மாநில உரிமைகள் பறிப்பு

மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு  வருகின்றன. காடுகள், அணைக்கட்டுகள், கல்வி  என ஒவ்வொன்றாக மாநில அரசிடம் இருந்து பறிக்கப்படுகிறது. இதை எதிர்த்து தமிழகம், கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் ஒரு பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் அனைத்து உரிமைகளும் படிப்படியாக பறிக்கப்படும். பின்னர் மாநில அரசு என்று ஒன்று எதற்கு என்ற  கேள்வி எழும்.

நவீன தாராளமயக் கொள்கை

நவீன தாராளமயக் கொள்கைகளை மோடி அசுர வேகத்தில் அமல்படுத்தி வருகிறார். இந்த  அரசின் நண்பர்களாக பன்னாட்டு முதலாளி களும், டாடாவும், பிர்லாவும், அதானியும், அம்பானியும்தான். இந்த அம்பானியும், அதானியும் மதவாதத்தை ஆதரிக்கிறார்கள். வழக்கமாக முதலாளிகள் மதவாதத்தை எதிர் ப்பார்கள். ஏனென்றால் அதனால் கலவரம்  ஏற்படும். உற்பத்தி, வியாபாரம் பாதிக்கப்படும் என்று. பெரும்பாலான தொலைக்காட்சிகளும், செய்தித்தாள்களும் ஆதரிக்கின்றன. சாதிய ரீதியாக, மத ரீதியாக ஒன்றிய அரசு மக்களை பிளவுபடுத்துகிறது. அசாதாரணமான சூழ்நிலையில் நாடு உள்ளது. இதற்கெதிரான வலுவான போராட்டம் தேவை என அனை த்துத் தரப்பு தொழிலாளர்களையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து நிலைமைகளை எடுத்துரைக்க வேண்டும். தொழிலாளி வர்க்கம் என்ற அடிப்படையில் அனைவரையும் ஒன்றி ணைக்க வேண்டும். தவறான தொழிலாளர் விரோத கொள்கைகளை பின்பற்றும் மோடி அரசை தூக்கி எறிய வேண்டும் என்றால் பொது மக்களிடம் சென்று நிலைமைகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

கார்ப்பரேட்டுகளின்  கைப்பாவை மோடி

சிஐடியு மாநில பொதுச்செயலாளர், டிஆர்இயு சங்கத்தின் தலைவர் ஜி.சுகுமாறன் பேசுகையில், ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீ காரத் தேர்தல் நடத்த ரயில்வே நிர்வாகம் தயாராக இல்லை. ஏனென்றால் ரயில்வேயை முழுமையாக தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாக ஒன்றிய அரசு செயல்படுகிறது. குஜராத்தில் துவக்கப்படாத நிறுவனங்களுக்கு மோடி அரசு  80 ஆயிரம் கோடி ரூபாய் வரை மானியம் வழங்கியுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க திராணியற்ற மோடி அரசு, இந்தியா வளர்ச்சியை நோக்கி செல்கிறது என மக்களி டம் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது. ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்து சிறு, குறு  நிறுவனங்களை அழித்து விட்டார்கள். பிஎஸ் என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான 70 ஆயிரம் டவர்களை தனியார் தொலைபேசி நிறுவனங் எளுக்கு தாரைவார்த்து விட்டது மோடி அரசு.  இப்படி பி.எஸ்.என்.எல், ரயில்வே, எல்ஐசி,  பாதுகாப்புத்துறை என அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் முற்றிலுமாக தனி யாரிடம் தாரைவார்க்க ஒன்றிய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. ஏழை எளிய மக்களை, தொழிலாளர்களை காக்க வேண்டிய மோடி அரசு பெருமுதலாளிகளின் ஏஜெண்டாக மாறி விட்டது. ரயில்வே துறையை பொதுத்துறை யாகவே பாதுகாக்கவும் தனியார்மயத்தை  முறி யடிக்கவும் ரயில்வேயில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும், பொதுமக்களையும் இணைத்துப் போராட வேண்டிய தேவை இருக்கிறது. அந்த பணியை முன்னெடுப்போம் என்றார்.

இதில் பொதுச்செயலாளர் வி.அரிலால், உதவி பொதுச் செயலாளர்கள் என்.பத்மகுமார், தீபா, திவாகரன், ராஜா, லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேஷன் இணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, ஸ்டேஷன் மாஸ்டர்ஸ் அசோசி யேஷன் உதவி பொதுச் செயலாளர் பூவண் ணன், தட்சிண ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன், பொதுச்செய லாளர் முருகேசன், பாலக்காடு டிவிஷன் செய லாளர் சுஜித், திருவனந்தபுரம் டிவிஷன் செய லாளர் அனில்குமார், சென்னை டிவிஷன் செயலாளர் அருள்குமார் செழியன், மதுரை டிவிஷன் செயலாளர் சங்கரநாராயணன், சேலம் டிவிஷன் செயலாளர் அல்லிமுத்து, ஒர்க்‌ஷாப் டிவிஷன் செயலாளர் சிகாமணி, ஐசிஎப்  யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செய லாளர் பா.ராஜாராம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி, மெட்ரோ ரயில் லேபர் யூனியன் இணை பொதுச்செயலாளர் அரவிந்தன் ஆகியோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த தர்ணாவில் தென் மாநிலங்களி லிருந்து ரயில்வே ஊழியர்கள் ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.


 

 

;