tamilnadu

img

மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கியதை விட குறைவு.... தமிழ்நாட்டிற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கிடுக.... பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்....

சென்னை:
தமிழ்நாட்டிற்கு 1 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஜூலை 13 அன்று பிரதமருக்கு முதல்வர்மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஒரு சிலதினங்கள் தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:

மே 27ஆம் தேதியிட்ட எனது முந் தய கடிதத்தை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அதில்கோவிட் -19 தடுப்பூசிகளைத் தமிழகத்திற்கு விசேஷமாக ஒதுக்கீடு செய்வதில் உங்கள் உடனடித் தலையீட்டை நான் கோரியிருந்தேன். ஆயிரம் மக்களுக்கு இவ்வளவு என ஒதுக்கீடு செய்வதில் தமிழகத்திற்கு தேவைக்கேற்ற அளவுக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.8-7-2021 வரை, 29,18,110 தடுப்பூசிகளை மட்டுமே தமிழகம் ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுள்ளது. 18-44 வயது பிரிவில் உள்ளவர்களுக்கும், மேற்கூறிய 45 வயது பிரிவில் 1 கோடியே 30 லட்சத்து8 ஆயிரத்து 440 தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன.தடுப்பூசிகளின் ஒதுக்கீடு மிகவும் போதுமானதாக இல்லாததால், மாநிலம் முழுவதும் தடுப்பூசிக்கான பெரும்தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது. பொதுமக்களிடையே தடுப்பூசி தயக்கத்தை நீக்கி, தடுப்பூசி போடும் இயக்கத்தை ஒருவெகுஜன இயக்கமாக மாற்றுவதற் கான எனது அரசின் முயற்சிகளின் வெற்றி இப்போது நமக்குக் கிடைத்த அளவுகளைச் சார்ந்தே உள்ளது.

இது தொடர்பாக, இந்திய அரசின்சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தனது பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்ததைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து எடுத்த வழக்கில் (suo moto W.P.(சிவில்) 2021 ஆம் ஆண்டின்) ஒன்றியஅரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தடுப்பூசி சமமாக விநியோகிக் கப்படுவதை உறுதி செய்வதற்காக, அந்தந்த மாநிலத்தின் 18-44 வயதுக்கு இடைப்பட்ட மக்கள்தொகையின் விகிதத்தில் மாநிலங்களுக்குக் கிடைக்கக்கூடிய தடுப்பூசி அளவை ஒதுக்கியுள்ளதாகச் சமர்ப்பித்துள்ளது.

இருப்பினும், தமிழகம் அதன் மக்கள்தொகை அளவிற்கு ஏற்ப தடுப்பூசிகளைப் பெறவில்லை, இதன்விளைவாகத் தடுப்பூசியில் தற்போதைய கடுமையான பற்றாக்குறை ஏற்படுகிறது. தமிழகத்திற்கு வழங்கப்படும் தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கை ஆயிரம் மக்களுக்கு 302 மட்டுமே. குஜராத், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு முறையே 533, 493 மற்றும் 446 என்ற அளவில்கிடைக்கக்கூடிய தடுப்பூசி அளவுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவு.எனவே, தமிழகத்திற்கான தடுப்பூசிஒதுக்கீட்டில் மேற்கண்ட ஏற்றத் தாழ்வைச் சரிசெய்து, ஒரு கோடி தடுப்பூசி அளவுகளில் சிறப்பு ஒதுக்கீடு செய்ய உங்கள் உடனடி தனிப்பட்ட தலையீட்டை மீண்டும் கோருகிறேன். இதனால் நாங்கள் திட்டமிட்ட இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கு மிகக் குறைந்த காலகட்டத்தில் தடுப்பூசி போட முடியும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;