tamilnadu

img

மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து....

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோரை வியாழனன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். திமுக தலைவர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தம்மை சந்தித்த மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த என்.சங்கரய்யா, இன்றைய காலக்கட்டத்தில் திமுக கூட்டணி தமிழகத்தில் பெற்றுள்ள வெற்றி தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.  தங்களது கடமையில் தமிழகம் சீரிய முறையில் முன்னேற்றம் காணும் என உறுதியாக நம்புகிறேன். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் தமிழக மக்களை பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பு திமுக அரசுக்கு உள்ளது. மேலும் அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில் திமுக முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று கூறினார்.

;