tamilnadu

img

சென்னையில் கடந்தாண்டு சாலைவிபத்தில் 1297 பேர் பலி

சென்னை,ஏப்.10விபத்துகால அவசர மருத்துவசேவைகளை வலுப்படுத்தசென்னை பெருபாக்கத்தில் உள்ள கிளெனீகள்ஸ் குளோபல் மருத்துவமனை போக்குவரத்து காவல்துறையுடன் கைகோர்த்துள்ளது.“சாலை பாதுகாப்பு முனைப்புத் திட்டங்களை” அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்காக “பாதுகாவலன்” (ழுரயசனயைn)என்று பெயரிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காகவும், தலைக்கவசம் மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் பெல்ட் அணிவதன் அவசியத்தை எடுத்துரைக்கவும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகரின் கூடுதல் காவல்துறை ஆணையர் (போக்குவரத்து) அருண் பேசுகையில் கடந்த ஆண்டில் மட்டும் சென்னையில் சாலை விபத்துக்களில் 1297 நபர்கள் உயிரிழந்தனர்.விபத்து நடைபெற்ற நேரத்தில் தலைக்கவசம் அணிந்திருந்தவர்கள் வெறும் 200 பேர் மட்டுமே என்றார். கடந்த ஆண்டு போக்குவரத்து காவல்துறை பதிவு செய்து4.5 லட்சம் வழக்குகள் ஹெல்மெட் அணியாத குற்றம் தொடர்புடையாகும். அபராதத்தொகையாக நாங்கள் வசூலித்த தொகை ரூ.27 கோடி என்றும் அவர்கூறினார். சென்னையில் சாலை விபத்துகளின் காரணமாக ஏற்படுகின்ற உயிரிழப்புகளை குறைக்க வாகன ஓட்டிகளும் அரசுக்கும் காவல்துறைக்கும் ஒத்துழைக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.சென்னை ஐஐடி பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன், குளோபல் மருத்துவ குழுமத்தின் தலைவர் டாக்டர் கே.ரவீந்திரநாத்,நரம்பியல் துறைத் தலைவர்தினேஷ்நாயக்,மூத்த மருத்துவ நிபுணர் நிஜெல் பீட்டர் சிம்ஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.  

;