tamilnadu

img

இன்றுடன் பிரச்சாரம் நிறைவு

விழுப்புரம்(தனி) மக்களவை தொகுதி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் துரை. ரவிக்குமாருக்கு வாக்குகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் விக்கிரவாண்டியில் பிரச்சாரம் நிறைவு செய்யப்பட்டது. வடக்கு மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஜெயசந்திரன்,உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


............................


விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாருக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு உளுந்தூர்பேட்டையில் இரு சக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது.


............................


கடலூரில் திமுக வேட்பாளர் டி. ஆர்.வி.எஸ் ரமேஷ் அவர்களை ஆதரித்து நடைபெற்ற இறுதிக்கட்ட பிரச்சாரம்.


............................


திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை நகர மக்களிடம் வாகன அணி வகுப்புடன் சென்று வாக்கு சேகரித்தார். திமுக தலைவர்கள் எ.வ.வேலு, கு.பிச்சாண்டி, சிறீதரன், கார்த்திவேல்மாறன், சிபிஎம் நிர்வாகிகள் எம்சிவக்குமார், எம்.வீரபத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


............................


கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவர். ஏ. செல்லகுமாருக்கு வாக்குகள் கேட்டு சிஐடியு முறைசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் குமுதன், குயின், ஜெயக்குமார், பெருமாள் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.


............................


புதுச்சேரி மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதல்வர் நாராயணசாமி இரு சக்கர வாகனத்தில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கோண்டார்


............................


ஆரணி மக்களவை தொகுதியின் வெற்றி வேட்பாளர் டாக்டர் ஆ. மு. விஷ்ணு பிரசாத்துக்கு ஆதரவாக சிபிஎம் சார்பில் ப. செல்வன் பிரச்சாரம் மேற்கொண்டனர்.


............................


ஆரணி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அவலூர்பேட்டையில் சிபிஎம் விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில் எம். கே.விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு நகரச் செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார், வட்டச் செயலாளர் டி.முருகன், வட்டக் குழு உறுப்பினர்கள் உதயகுமார், விஜிய

குமார்,ஹரிகரகுமார், எழில் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


............................


அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காட்பாடியில் வீதி வீதியாக பிரச்சாரம் நடந்தது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, காட்பாடி இடைக்குழு செயலாளர் சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எல்.சி.மணி, தா.வெங்கடேசன், என்.ரமேஷ், பத்மாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;