tamilnadu

ஆக்சிஜன் பற்றாக்குறையா? எடப்பாடிக்கு அமைச்சர் பதில்....

சென்னை:
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று குற் றம்சாட்டியிருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். 

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் முன்னாள் முதல் வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக் கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,” தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் இறப்போர் எண்ணிக்கை குறைத்து காண்பிக்கப்படுகிறது” என்று குற்றம் சுமத்தினார்.அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக் குறை நிலவுகிறது. எல்லா மயானங்களிலும் சடலங்கள் காத்து கிடக்கின்றன. படுக்கை வசதிக்காக ஆம்புலன்ஸிஸ் காத்திருக்கும் நோயாளிகள் இறக்கும் நிலை உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்றும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை செய்ய வேண்டுமென்றும் கூறினார்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்களுக்கு  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.தமிழக அரசின் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் அதிக அளவு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படுவதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.தமிழகத்தில்தான் அதிகஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 1.7 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. .

மே 6 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழகத்தின் ஒருநாள் ஆக்சிஜன் கையிருப்பு 230 மெட்ரிக் டன். தற் போதைய ஒரு நாள் கையிருப்பு 650 மெ.டன்னாக உள்ளது.அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், உதயகுமார், செல்லூர் ராஜூ, பாஜக பேரவை உறுப்பினர்கள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டுகின்றனர்.மேலும் பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்து முதல் வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

;