சென்னை:
வேல் யாத்திரைக்காக தமிழக பாஜக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது. இதில்ஒலிக்கும் பாடலில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. ஆர்ஆகியோரை காண்பித்துள்ளனர். மற்றுமொருஎல்.முருகனின் வீடியோவில் எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் ஒரு பாடலைப் போலவே அமைந்துள்ளது. மேலும் எம்.ஜி.ஆர் நிலத்தை கொத்துவது , வயலில் டிராக்டர் ஒட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
இது குறித்துப் பேசிய பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், எங்கள்தலைவர் காமராஜரையும் மேற்கோள்காட்டுகிறார். “காமராஜரைப் போலவே எம்.ஜி.ஆரும் நல்லாட்சிக்கு பெயர் பெற்றவர். எம்.ஜி.ஆர் ஒரு தலைவராக இருந்தார், எம்ஜிஆர் தமிழகத்தில் சின்னமாக விளங்கியவர். எனவே அவரது குறிப்பை நாங்கள் பயன்படுத்துகிறோம்” என்றார்.எம்.ஜி.ஆரின் படத்தை பாஜக பயன்படுத்துவதற்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
திராவிட சித்தாந்தமும் இயக்கமும் வேறு. பாஜகவின் சித்தாந்தம் வேறுபட்டது. எங்கள் தலைவரின் காட்சிகள் மற்றும் படங்களை அவர்களின் கட்சி வளர பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல; கண்டிக்கத்தக்கது. புரட்சி தலைவரின் புகழ் மற்றும் உரிமை அதிமுகவினருக்கு மட்டுமே சொந்தமானது, இதற்கு உரிமை கோருவதற்கான தார்மீக உரிமை மற்ற கட்சிகளுக்கு இல்லை என்றார்.பாஜகவில் நல்லாட்சி வழங்கிய தலைவர்கள் குறைவாக இருப்பதால்தான் அவர்கள் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்துகிறார்களா? எல்.முருகனை எம்.ஜி.ஆருடன் இணைத்து ஒப்பீடுவது எல்லை மீறிய செயல். எம்.ஜி.ஆர் ஒரு பாரத் ரத்னா. மக்கள்இன்னும் அவரை கடவுளைப் போலவே பார்க்கிறார்கள். நீங்கள் யாருடன் யாரைஒப்பிடுகிறீர்கள்? நீங்கள் உங்கள் வரம்பைமீறவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.