tamilnadu

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் வெளியீடு!

சென்னை, ஜூலை 2- விண்வெளி ஆய்வில், ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு இணை யாக இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் பல புதிய சாத னைகளை படைத்து வருகிறது. உலக அளவில் மிக குறைந்த செலவில் ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்புவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆந்திராவில் சென்னைக்கு அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தான்  ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வருகின்றனர்.

அங்கு இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன.  எதிர்காலத்தில் மேலும் 2 ராக்கெட் ஏவுதளங்கள் தேவை என்ற நிலையில் நாடு முழுவதும் பல இடங்களில்  ஆய்வு செய்யப்பட்டு, அதில், தமிழ்நாட்டின் தென்  பகுதியில் குலசேகரன்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நூறு  சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக இஸ்ரோ தலைவர்  சோம்நாத் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தி ருந்தார்.

 இதையடுத்து, தற்போது குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கு கட்டட கட்டுமான பணி தொடர்  பான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரூ. 20.29 கோடி மதிப்பில் கட்டுமான பணி  மேற்கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது.

மேலும், தொழில்நுட்ப சேவை கட்டடம், ஏவுதள  தீயணைப்பு நிலையம் மற்றும் எஸ்எஸ்எல்சி ஏவுதள மையம் உள்ளிட்டவைகளுக்கான கட்டுமான பணி ஒப்பந்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  ஜூலை 22 அன்று 2.30 மணி முதல் ஒப்பந்தத் திற்கான ஆவணங்களை ஆன்லைன் மூலம் பதிவி றக்கம் செய்து கொள்ளலாம் என்றும் இஸ்ரோ சார்பில்  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.