விழுப்புரம்.அக்.30- விழுப்புரம் மாவட்டத் தில் பொதுத் துறை வங்கி களுக்கான வாடிக்கையா ளர்கள் சந்திப்பு முகாம், விழுப்புரத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. தொடக்க நாளன்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணி யன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார். அப்போது பேசிய ஆட்சி யர், “விழுப்புரம் மாவட்டத் தில் பொதுத் துறை, தனி யார், கூட்டுறவு வங்கிகள் என 324 வங்கிக் கிளைகள் மூலம், விவசாயிகள், தொழி லாளர்கள், மகளிர் முன் னேற்றத்துக்கான சேவை கள் வழங்கப்பட்டு வரு கிறது” என்றார். வங்கிக் கணக்கு வைத் துள்ளவர்கள், ஆண்டுக்கு ரூ.12 அல்லது ரூ.324 செலுத்தினாலே, காப்பீடு திட்டத்தில் விபத்து இழப்பீ டாக ரூ.2 லட்சம் வரை கிடைக்கும் என்றும் அவர் கூறினார். மத்திய, மாநில அரசுக ளின் பல்வேறு தொழில் கடன் திட்டங்கள் செயல்படுத்தப் படுகிறது. மத்திய அரசின் அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 40 வய துக்குட்பட்டவர்கள் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட ஒரு தொகை வீதம், 60 வயது வரை செலுத்தி வந்தால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை மாதந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு மத்திய அரசு மூலம் கடன் திட்டம் (கிசான் கிரெடிட் கார்டு) அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தில் நமது மாவட்டத்தில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 689 பேர் பயன டைந்துள்ளனர், இவர்கள் அனைவருக்கும் விவசாயக் கடன் அட்டைகளை (கிசான் கிரெடிட் கார்டு) வங்கிகள் வழங்க வேண்டும் என்றும் ஆட்சியர் வலியுறுத்தினார். பேங்க் ஆப் பரோடா வங்கி பொது மேலாளர் ராம கிருஷ்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் முருகன், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மண்டல மேலாளர் சம்பத்குமரன், கனரா வங்கி மண்டல மேலாளர் அசோக் குமார், பாரத ஸ்டேட் வங்கி உதவிப் பொது மேலாளர் அஸ்வத் துரைசெல்வம், மாவட்ட தொழில் மைய மேலாளர் தாமோதரன், சிறு, குறு தொழில் மைய கூட்ட மைப்பு அம்மன் கருணாநிதி மற்றும் வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்ன தாக, இந்தியன் வங்கி மண்டல துணை மேலாளர் ஆர்.ராஜகோபால் வர வேற்றுப் பேசினார், முடிவில் முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன் நன்றி கூறினார்.