சென்னை, மே 20 - காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவ மனையில் கொரோனா தொற்றால் 34பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலை யில் அந்த மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திடீர் ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 19 வரை 208 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிப்பட்டுள்ளது. இதில் 92 பேர் குண மடைந்துள்ளனர. 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மாங்காடு, குன்றத்தூர் பகுதியில் வசிப்போர் பெரும்பாலும் சென்னையில் பணிபுரிவ தாலும், கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த தாலும் அந்தப்பகுதிகளில் தொற்று அதிக மாக உள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்த 82 பேருக்கு பரி சோதனை செய்து 41 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனி மைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வரு கின்றனர்.