tamilnadu

img

சுடுகாட்டுப் பாதையை ஆக்கிரமித்து தலித்துகளை தவிக்க விட்டதற்கு கி.வீரமணி கண்டனம்

சென்னை, ஆக. 22- வாணியம்பாடி அருகே விபத்தில் இறந்த தலித் சகோ தரரின் உடலை எரியூட்ட எடுத்துச் செல்ல பாதை இல் லாமல் அவதிப்பட்டுள்ளசம்  பவத்திற்கு திராவிடர் கழகத்  தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டம் வாணி யம்பாடி அருகில் உள்ள நாரா யணகுப்பம் என்ற ஊரில் தலித் சமூக சகோதரர்களில் ஒருவரான குப்பன் என்பவர்  சாலை விபத்தில் மரணம டைந்தார். அவரது சவத்தை அவர்கள் ஊருக்கு அருகில் உள்ள சுடுகாட்டில் எரி யூட்ட எடுத்துச் செல்ல முடி யாதபடி, அச்சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்ட பாதையையும் மற்றவர்கள் ஆக்கிரமித்து, சவங்களை சுமந்து சென்று  எரியூட்ட வழி இல்லாமல் செய்ததால், தொட்டில் ஒன்று  கட்டி, 20 அடி உயரமுள்ள கட்டப்பட்ட பாலத்திலிருந்து அச்சவங்களைத் தொட்டிலி லிருந்து இறக்கி, பிறகு ஈமச் சடங்குகள் செய்தார்கள். இது சில மாதங்களாகவே தொடருகின்றது என்பது  வேதனைக்கும், வெட்கத்திற் கும் உரிய செய்தியாகும். இந்த 21 ஆம் நூற்றாண் டில், அதுவும் தமிழ்நாட்டில் -  பெரியாரின் திராவிட மண்  ணிலா இப்படிப்பட்ட அநாக ரிக ஆக்கிரமிப்புகள். வாழும்  போதுதான் கொடுமை என் றால், இறந்த பிறகாவது தலித் சகோதரர்கள் கண்ணி யமாக - பிரச்சனையின்றி எரி யூட்டப்பட வேண்டாமா? வேலூர் மாவட்ட நிர்வா கம் இதனை உடனடியாக சரி  செய்தாக வேண்டும். வேலூர்  மாவட்ட ஆட்சியர் இதன் மீது உடனடியாக நட வடிக்கை எடுத்து, சுடுகாட்டுப்  பாதையில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றிட உறுதி  கூறியுள்ளது ஆறுதலான தும், மிகவும் வரவேற்கத் தக்கதும் ஆகும். இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

;