சென்னை, ஜூன் 26- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்துறையின் அத்துமீறல் அராஜ கத்தால் இருவர் மரணம் அடைந்தது- அதிர்ச்சிக்குரியது என்றும் மனித உரிமை களை மதிக்கவேண்டுமே தவிர, காலில் போட்டு மிதிக்கக் கூடாது என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்தி ருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத் தில் இரண்டு வணிகப் பிரமுகர்கள் ஜெய ராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் ( 31) ஆகியோர், கொரோனா ஊரடங்கின்போது கடைகளை குறிப்பிட்ட நேரத்திற்குமேல் திறந்திருந்தார்கள் என்பதற்காக அங்கே பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள், அவர்களை கைது செய்து, வழக்குப் போட்டு சிறையில் அடைத்ததோடு, வரம்பு மீறி, மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். சிறைக்காவலில் மரணமடைந்த இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி யுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் இத்த கைய போக்குகளை தொலைக் காட்சிகள் படமெடுத்துப் பரப்பியும்கூட, பயமோ கடமை உணர்வை கருத்தோடு செய்யும் மனோ நிலையோ ஏனோ சில காவல்துறை அதிகாரி களுக்கு வருவதில்லை. காவல்துறை மனித உரிமைகளை மதிக்கவேண்டும்! காலில் போட்டு மிதிக்கக் கூடாது; இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள்மீது வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்; அப்போதுதான் அத்துறை யின்மீது ஏற்பட்டுள்ள களங்கமும், கறையை யும் துடைக்க வழியேற்படும். தவறு செய்த வர்களை தண்டனையிலிருந்து தப்ப அனு மதிக்கக் கூடாது. காவல்துறை மீது மக்க ளுக்கு ஏற்படவேண்டியது விருப்பே தவிர, வெறுப்பு அல்ல என்பதை மறந்துவிடக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.